பக்கம்:வீடும் வெளியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 露繆 இந்த விஷயத்திற்காகத்தான் அவர் சொக்குக் கவி ராயரை வரவழைத்திருந்தார். "என்ன சொக்கையா, திருநகர் பூரா உன் பேரு முழங்குதே!’ என்ருர் முதலாளி. என் பாட்டும் முழங்குதே!' என்று கர்வத்தோடு பேசினர் கவிராயர். இப்போதெலலாம் நான் பழைய சொக்களுே, சொக்கையாவோ இல்லை. சொக்குக் கவி ராபர் இவரு! எனக்கு நேரமே இல்ல, முக்கிய சோவியாப் போயிக்கிட்டிருந்தேன். ஐயா என்னைப் பார்க்க விரும்பு வதாக தகவல் கிடைச்சுது வந்தேன். சீக்கிரம் சொல் லுங்க!' என்றும் அவசரப்பட்டார். சொக்கையாவின் தோரணையும் பேசுகிற தினுசும் மாறிப் போய்விட்டதை முதலாளி புரிந்து கொண்டார். * ஊம் இப்போ கவிராயர் காட்டிலே மழை பொழி புதுன்னு சொல்லும்! பேஷ் பேஷ்!" என்று வேடிக்கைப் பேச்சு சிந்திஞர். சொக்கையாவும் சிரித்துக் கொண்டார். பிறவிப் பெருமாள் சிரத்தையோடு பேசலார்ை: *காலம் மாறி வருகிறது. அதுக்கு ஏற்றபடி நாமும் நம்ம பாலிசியை மாற்றிக்கொளள வேண்டியது தான்னு முடிவு பண்ணியிருக்கிறேன். இந்த ஊரு ஜவுளி முதலாளி களுக்கு வழிகாட்டுகிற மாதிரியும் இருக்கணும்; முதலா வத்ாகச் செயல் புரிந்தது போலவும் இருக்கவேணும். அதஞலே நான் என்னுடைய பட்டு ஜவுளிக் கடையை * சுதேசி பந்தர் ஆக மாற்றப் போகிறேன்.” "அதுக்கு ஏன் சுதேசிக் குரங்கு ஆக மாற்றணும்? சுதேசிக் கடையாகவே மாற்றுங்க!' என்ருர் கவிராயர். வார்த்தையை வைத்து விளையாடி ஹாஸ்யம் பண்ணியதைப் புரிந்துகொள்ள இயலாததனால், முதலா வரிக்குச் சிறிது கோபம் ஏற்பட்டது. என்ன சொல்றே?’’ ன்ைறு சினத்தார்.