பக்கம்:வீடும் வெளியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 荔敦 கள். ஆகவே அநேகர் அவரவருக்குத் தோன்றிய வகையில் எதிர்ப்பு’க் காட்டி வந்தார்கள், தொண்டர் நாதன் தினசரி த ப ா ல | பீ சி ல் ஒன்றிரண்டு மணியார்டர் பாரம் பெற்று, அதைக் கிழித் தெறிந்து வந்தார். சக்கரவர்த்தியின் உருவம் பொறித்த வெள்ளி ரூபாயில், அவ்வுருவின் முகத்தில் துவாரம் செய்து, தனது சாவிக் கொத்து வளையத்தில் இணைத் திருந்தார். நூல் நூற்பதற்கு, தக்ளி செய்ய சக்கர வர்த்தி உருவம் உள்ள நாணயங்களையே உபயோகப் படுத்தினர். அவ்வாறு செய்வதன் மூலம், மாட்சிமை தங்கிய மன்னர் பிரான அவமதிப்பது போலவும் ‘ராஜ பக்தி'யை அங்கீகரிக்கவில்லை என்றும் ஆவர் கர்வத் தோடு நம்பினர். தொண்டர் நாதன் தேச பக்தர் ஆகத் துணிந்ததும், அவ் இயக்கத்துக்குத் தன்னைப் பூரணமாக அர்ப்பணம் செய்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் "வாழ்க்கை வசதிகள் பெற்றவர் அல்லர். அவருக்குத் குடும்பம் இருந்தது. மனேவியும் இரண்டு பிள்ளைகளும் அவருடைய தாயாரும் அவரை நம்பியிருந்தார்கள். அவர் பிழைப்புக்காகச் சிறு கடை ஒன்று நடத்தி வந்தார். வெற்றிலே, பாக்கு, பீடி. சிகரெட் வகையரா விற்பனை, அத்துடன் அவருக்கே சர்பத் எசென்ஸ் காய்ச்சத் தெரியும். அதைத் தயாரித்துப் புட்டிகளில் அடைத்து விற்பனை செய்தார். படங்களுக்குக் கண்ணுடியும் சட்டமும் இடுகிற தொழிலையும் கவனித்து வந்தார். தன்முக உழைக்கும் மனிதர். ஆகையால் போதுமான வரும்படி இருந்தது. தேசப் பணியை அவர் மேற் கொண்ட பிறகு, அவருடைய கடை சரிவரத் திறக்கப் படாமலே போயிற்று. அதனல், வருமானம் குறைந்தது. அவருடைய மனைவியும், மக்களும் அரை வயிற்று உணவு கூடப் பெற முடியாத நிலைதான் ஏற்பட்டது. பெரிய லட்சியப் பணியில் ஈடுபடுகிறபோது, இந்த விதமான கஷ்ட நஷ்டங்கள் குறுக்கிடத்தான் செய்யும். உண்மையான தேசபக்தன் இதை எல்லாம் பொருட் படுத்தக் கூடாது. சுவாமி விவேகானந்தர் என்ன