பக்கம்:வீடும் வெளியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 劉對 "ஜமாய்த்து விடலாம்!” என்ருர்கவிராயர். மேடை முதலாளியும் அந்தக் கூட்டத்துக்காகத்தான் பாட்டு கேட்டார்.” "அவருக்கும் கூட்டத்துக்கும் என்ன சம்பந்த மோ ?” அவர் மகன் திருமலை தேச பக்தராக மாறுவதற்கு அன்றுதான் நல்ல நாளாம்! அதற்கு விழா மாதிரி..." சரிதான். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அதில் இதுவும் ஒன்று போலிருக்கு' என்று மு ைகியபடி, தன் வழியே போளுர் தொண்டர். 8. சிந்தனைக் குழப்பம் திருநகருக்குப் பெருமை அளித்துக் கொண்டிருந்த சிறப்புகளில் உயர் நிலம் என்பதும் ஒன்று ஆகும்: ஊருக்குக் கிழக்கே நகரத்தின் நச்சுக் காற்று படாத தொ ைவில், அமைந்திருந்தது அது. நகரத்தைவிட மேடான பகுதி. பொட்டல் காடு போல் தோன்றி: அப பெருவெளியில் சதா காற்று ஜிலு ஜிலுவென வீசும். திருநகரைச் சுற்றி உள்ள வட்டாரங்களில் கடமை யாற்றிய வெள்ளைக்காரத் துரைமார்கள் அங்கே தங்கள் பங்களாக்களே அமைத்துக் கொண்டார்கள். ஆதை ஹை. கிரவுண்ட் என்றும் குறிப்பீட்டார்கள். அவர்களே காப்பி அடிப்பதே கெளரவம் என்றும், வெற்றிகரமான வாழ்க்கை முறை எனவும் கருதிய கருப்புத் துரைகள் சிலர் தங்களுக்கு அங்கே சிறுசிறு பங்களாக்கள் கட்டிக்கொண்டு, நாகரிகமாக வாழ்வதில் ஆர்வம் காட்டிஞர்கள். அங்கே கத்தமான காற்று வீசுவதால் நோயாளி களுக்கு சுகவாசஸ்தலமாகவும் அது பயன்படும் என்று டாக்டர்கள் சிபார்சு செய்தார்கள். வசதி உள்ள வீ. வெ. 3-445