பக்கம்:வீடும் வெளியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வீடும் வெளியும் காட்டுகிறது” என்ருர் சந்திரசேகரன். அவர் ஒரு இக்கீல். - 'காந்தி மதத்தையும் அரசியலையும் ஒன்ருக இணைத்து விட்டார். தனிமனிதனின் ஆத்ம உயர்வுக்காக இற்படுத்தப்பட்டுள்ள சத்தியம், தூய்மை, எளியவாழ்வு, பிறப்பிளுல் உயர்வு தாழ்வு _பாராட்டாமை, கள் உண்ணுமை, எத்தொழிலேயும் இழிவாகக் கருதாமை, செல்வத்தை அலட்சியம் செய்தல், உண்ணு நோன்பு, பிரமச்சரியம், துறவு போன்ற உயர்ந்த பண்புகளை அவர் அரசியல் வாதிகளுக்கு, முக்கியமாக விடுதலை இயக்கத் .ெ த ண் டர் களு க் கு , வற்புறுத்துகிருர், சாமியார் களிடமும் துறவு மார்க்கத்திலும் பக்தியும் பற்றுதலும் கொண்டுள்ள பெரிய நாட்டின் மக்களுக்கு இந்த அம் சங்கள் மிகுதியும் பிடித்து விட்டன. இவை ஏகப்பட்ட பேரைக் கவர்ந்து இழுக்கும் வசிய சக்தியாக வேலை செய் கின்றன என்று புரபசர் சோமசுந்தரம் பேசினர். - - சந்திரசேகரன் குறுக்கிட்டார். அதையேதான் தானும் சொல்கிறேன், மிஸ்டர் காந்தியை நான் :ேற்றத் தயாராக இருக்கிறேன். ஆளுன் எப்படி? ஏன், உத்தர் போன்ற ஞானிகளின், மதப் பெரியார்களின் வரிசையில் வைத்து!’ என்று அவர் சொன்னர், சோமசுந்தரம் சிந்தனை நிதானத்தோடு தன் சன்னங்களை வெளியிட்டார். "தனிமனிதனின் ஆன்மீக உயர்வுக்காக ஏற்பட்ட உயரிய சிரம சாத்தியமான, செயல்முறைகளே மொத்தமாக ஒரு நாட்டினர் பின்பற்ற வேண்டும். உடனடியாகச் செயலில் அனுஷ்டிக்க ண்டும் என்று விரும்புவதும், திட்டமிட்டு விதி செய்வதும் புரட்சிகரமான போக்குத்தான். தனிமனிதர் கள் கூடக் கடுமையான பயிற்சியின் பிறகே ஒருவாறு வெற்றி பெறக்கூடிய இச் சாதனைகளை பல சமூகங்களும், தாடும் வெகு சுலபமாக நினைத்த மாத்திரத்தில், கையாண்டு சாதனை நிறைவு பெறமுடியுமா என்பது சந்தேகத்துக்கு உரியதே, ஆயினும் இதன் முடிவை தாம் காலத்துக்கு விட்டுவிடுவோம்.?’’