பக்கம்:வீடும் வெளியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 43 வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதே! உறுதியான, வளமான, நிகழ்கால வாழ்வை தேச பக்தியின் பேரால் காவு கொடுக்க எவ்வளவோ பேர் துணிந்திருக்கிருர்களே. நிச்சயமற்ற எதிர்காலம் பற்றி இப்பவே நான் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்று அவன் சிந்தித்தான். "என் அப்பா அம்மா என் வீடு, என் குடும்பம் என்ற குறுகிய நோக்கு வ ள ர் வ. த ஞ ல் தா ன் தனிநபர்களில் பெரும்பாலோருக்கு சமூக நல உணர்வு ஏற்படாமலே போகிறது. சின்னதோர் கடுகு உள்ளம் பெற்றவர்கள் தங்களுடைய வருங்கால வாழ்க்கை பற்றியும், தங்கள் பெண்டாட்டி பிள்ளைகளின் நிலைமை குறித்தும் கவலைப்படுவது இயல்பு ஆகிவிடுகிறது. வீட்டுக்குள்ளேயே ஒடுங்கிக் கிடக்க விரும்பவில்லை நான். மனித சமுதாயமும், நாடும் நன்னிலை அடையவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று அவன் கூறிக் கொண்டான். இதையேதான் அவன் புரபசர் சோமசுந்தரத் திடமும் சொன்னன். ஒரு நாள் அவரை அவன் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. அவராகத்தான் பேச்சுக் கொடுத்தார். - என்ன காந்திமதிநாதன், இன்றைய வேகம் உன்னையும் சும்மா விட்டு விடவில்லே போல் தெரியுது! எல்லாம் கேள்விப்பட்டேன். படிப்புக்கு ஒரு கும்பிடு என்று பெரிய கும்பிடு போட்டு விட்டாயா க்கும்?" என ருர் அவர். - காந்தி வெறுமனே சிரித்தபடி நின்ருன்.

உம். உள்ளம் தேர்ந்துகாட்டுகிற வழியில் செயல் புரியக் கிளம்புவதற்குத் துணிச்சல் வேண்டியதுதான். அந்தத் துணிவு உன்னிடம் இருப்பதாகத் தெரிகிறது. இதே துணிச்சல் இன்று நாட்டு மக்களில் பலபபல பேரிடமும் காணப்படுகிறது. எனவே, அதிசயிக்கத் தக்க சாதனைகள் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். எல்லாவற்றையும் நான் அக்கறையோடு கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்' என்று புரபசர் சொன் ஞர்.