பக்கம்:வீடும் வெளியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 感郡 பாடு செய்வதிலும், தீண்டா தார் என ஒதுக்கி வைக்கப் பட்டவர்களின் வீடுகளில் உணவு உண்பதிலும் அவன் உறசாகம் காடடினன. இதனுல் எல்லாம் அவனுடைய உறவினர்களே அவனப்பற்றிக் கேவலமாகப் பேசிஞர்கள். ஒரு சிலர் செந்தில் நாயகத்திடம் மகனப் பற்றிய செய்திகளைக் சொல்லிவிட்டு, அவன் இப்படி மாறுவான் என்று யாராவத எண்ணியிருக்க முடியுமா? நல்ல பையன் இப்படி பெரிய குடும்பத்தின் பேரைக் கெடுத்துக்கிட்டுத் திரிகி.முனே' என்று குறைப்படுவார்கள். முதலாளி செந்தில் நாயகம் முகத்தைக் கடு கடுப் பாக்கிக் கொண்டு 'அவன் பேச்சை என்னிடம் பேச ஆேண்டாம். என் மகன் செத்தொழிந்தானென்று தான் கையைக் கழுவியாச்சு. அவன் என்ன செய்தால் இனி எனக் கென்ன ?' என்று சொல்லி விடுவார். பையன் போகிற போக்கைப் பார்த்தால், எவளாவது ஒரு பள்ளியை கல்யாணம் பண்ணிக் கோள்வான்போல் தோணுது' என்று ஒரு பெரியவர் சொன்ஞர். அவன் பள்ளி பறைச்சியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும். அல்லது, எவளாவது சக்கிவிச்சியைச் சேர்த்து வைத்துக் கொள் ளட்டும்! அவன் எக்கேடும் கேட்டு எப்படியும் நாசமாகட்டும்’ என்று தனது விரக் தியைச் சாதிவெறியோடு அறிவித்தார். தந்தையின் பேச்சும் சுடுசொற்களும் சில சமயம் காந்திமதிநாதனின் காதுகளே எட்டுவதும் உண்டு. அப் போதெல்லாம் அவன் புன்முறுவல் பூப்பது தவிர, வேறு எவ்விதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்துவது கிடை யாது. பழங்காலத்து ஆட்கள் வேறு எவ்வாறு நடப்பார் கள்? இவ்விதம் தான் பேசுவார்கள்; செயல்புரிவார்கள்!” என்று அமைதியாய் சொல்லிவிடுவான். அவன் பொதுப்பணிகளிலும் சமூகத்தொண்டிலும் தீவிரமாக ஈடுபட்டதைப் போலவே, தனது உடல்,