பக்கம்:வீடும் வெளியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.தி.8 விடும் வெளியும் இரு நிகழ்ச்சிகளும் திருநகரில் அவர் பெயர் விளம்பர கமாவதற்கு நன்கு உதவின. பெரிய பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்தி பெரும் தலைவர் பிறவிப் பெருமாளின் வசதிகள் மிகுந்த பங்களா வில்தான் தங்கினர். அவர் அங்கு மிங்கும் போய் வருவதற்கு முதலாளியின் கார்தான் பயன்பட்டது தலைவருக்கும் பிரசங்கிகளுக்கும் பிரமுகர்களுக்கும் சிறப்பாக விருந்தளித்த முதலாளி ஏழை எளியவர் களுக்கும் அன்னதானம் செய்தார். அவருக்கு எதையுமே சாதாரணமாகச் செய்து பழக்கம் கிடையாது. பெரிய அளவில் செய்து பழகிய கை அவருடையது! கலெக்டர் துரைக்கும். சூப்ரண்டு துரைக்கும் சில சமயங்களில் அவர் அன்பளிப்பாகக் காணிக்கைகள் அலுப்பு:து உண்டு-கிறிஸ்துமஸ், புது வருஷன் பண்டிகை சமயத்தில்தான். அவர் அனுப்புகிற சாமான் களே பார்த்தால், கல்யாண விருந்துக்குப் போதும் போல் தோன்றும். கூடை கூடையாய் முட்டைகள், வாத்துக் கள். ஆரஞ்சு ஆப்பிள் பழ தினுசுகள் என்று சப்ளே ங்ணனு:வாா. இந்தச் சந்தர்ப்பத்திலும் அவருடைய தாராளம் புதிய நபர்களுக்கு பிரமிப்பைத் தந்தது. பெரிய வாழை இல பரப்பி, பழவகைகளும் பாயசமும் நெய்யுமாக அளித்து, விழுந்து உபசரித்து எல்லோரையும் மகிழ் வித்தார். இவ்வாறெல்லாம் அவர் செய்யும்போது ஏதோ பயனை எதிர்நோக்கி அவர் செய்கிறர் என்று சொல்வி விட முடியாது. கொடுப்பதில் இன்பம் காண்கிறவர் அவர். ஈகைக் குணம் அவருடைய சுபாவங்களில் ஒன்ருக அமைந்திருந்தது. முதலாளி இப்படிப் பலருக்கும் அள்ளி வழங்கு கிறுரே! நமக்கும் ஆபத்துச் செலவுக்கு உதவட்டும்ே; கேட்டால் கொடுக்காமலா இருப்பார் என்று சாதரன நபர்கள், ஏழை எளியவர்கள் அவரிடம் உதவி கோரினல்,