பக்கம்:வீடும் வெளியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 49 கடன் உதவி வேண்டினல்கூட அவருக்குக் கொடுத்து உதவ மனம் வராது. அவராக மனமுவந்து, அவர் இஷ்டப்படுகிறவர்களுக்கு, கொடுத்தால்தான் உண்டு. இந்தவிதமான முரண்பாடு ஒன்றும் அவரிடம் குடி கொண்டிருந்தது. இதைச் சொக்குக் கவிராயர் உணரத் தவறிவிட்டார்: கவி சொக்கையா சுதேசி ஜவுளிக் கடைத் திறப்பு விழாவின் போதும், திருமலையப்பன் ஊர்வலம் வந்த். சமயத்திலும் அருமையான பாட்டுகளைப் பொழிந்து தள்ளினர். பொதுக் கூட்டத்திலும் அவருடைய பாடல் கள் முழங்கின. பக்திப் பாடல்களை அடியொற்றி எதிர்க் கட்சிக்காரர்களை நையாண்டி செய்யும் பாடல்கள் பல அவர் இயற்றியிருந்தார். அவை எல்லோராலும் பாராட் டப்பட்டன. - இவ் விழ வைபங்கள் முடிந்து இரண்டு தினங்கள் சென்ற பிறகு, கவிராயருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. பணத் தட்டுப்பாடுதான் அப்படி அவரை எண்ணத் துண்டியது. மேடை முதலாளியிடம் ஸ்ம்திங் கேட்டுப் பார்த்தால் என்ன? ஆசை எழுத்த உடனேயே அவர் செயல்புரிய விரைந்தார். - பிறவிப் பெருமாள் அலட்சியமாக அவரை நோக் இஞர். என்னடே சொக்கு, என்ன சமாச்சாரம்: என்று முதலாளி தோரனையிலேயே விசாரித்தார். கவிராயர் மென்று விழுங்கினர். அன்றைக்கு ஊர்வலம் கூட்டம் எல்லாம் பிரமாதம்' என்று ஆரம் பித்தார். அப்பொழுதாவது அவருடைய பாட்டுக்களைப் பாராட்டி முதலாளி சில வார்த்தைகள் பேசமாட்டாரா என்ற அல்ப ஆசைதான் இதற்கு அடிப்படை. முதலாளி அப்படி எதுவும் செய்துவிட வில்லை. 'உம்'உம்' என்று அலட்சியமாகக் குரல் கொடுத்தார். அவர் போக்கு கவிராயருக்கு ஏமாற்றமே தந்தது. எனினும் சொக்கையா மனச் சோர்வு கொள்ளவில்லை.