பக்கம்:வீடும் வெளியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 5リ "நம் எல்லோருக்கும் அன்னையான பாரதமாதா வுக்கு நான் செய்தாக வேண்டிய கடமை என்னை அழைக்கிறது. பிறந்த பொன்னுட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டியதுதான் மிக முக்கியமான கடமை என்று என் மனம் எனக்கு வழி காட்டுகிறது.’ என்று அவன் உணர்ச்சி வேகத்தோடு பேச ஆரம்பித்தான். அன்னம் குறுக்கிட்டு, அவனுடைய தாயின் வார்த்தைகளை அறிவித்தாள். இந்த வீட்டில் இனிமேல் அடி எடுத்து வைக்காதே என்று என் அப்பா கண்டிப்பாகச் சொல்லியிருக்கிருள். அம்மாவோ அங்கு வரும்படி சொல்கிருள். தர்மசங்கட மான நிலைமைதான்’ என்ருன் காந்தி. சிறிது நேரம் தயங்கினன். பிறகு சரி, நாளை கோயிலில் பூஜை முடிந்தபின் நான் அம்மாவைப் பார்க்க வாறேன். இத்ை அம்மாவிடம் சொல்லு!’ என்ருன். "வருவீர்களா அத்தான் ? கட்டாயம் வரணும். வரா மல் இருந்துவிடக்கூடாது' என்று அழுத்திக் கூறிஞள் அன்னiமி. ஊம் ஊம்” எனத் தலை அசைத்துச் சென்ருன் காந்தி. - அவன் திரும்பி மறுபடியும் தன்னை ஒரு முறையா வது நோக்க மாட்டான என்ற ஆசையோடு, தவிப் போடு அவனையே பார்த்தபடி நின்ருள் அன்னம் ஏமாற்றம்தான் அவளுக்குக் கிட்டியது. 12. பலவிதப் பண்புகள் மேடை முதலாளி பிறவிப் பெருமாள் அவர்களின் ஜவுளிதினுககளுக்குத் தீயிட்டுப் பொசுக்கியதாக கவி. ராயர் சொக்கையாவும், தொண்டர் நாதனும், மற்றும் சிலரும் கைதுசெய்யப்பட்டிருந்து போதிலும், அவர்கள் தான் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்கு எவ்வித