பக்கம்:வீடும் வெளியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 5g கடமை என்று அவர்கள் நம்பினர்கள். அந்த லட்சியத் துக்காகவே உழைத்தார்கள். தொண்டர் நாதன் மற்றவர்களைப் பார்க்கிலும் தீவிர வேகமும் , செயல் துடிப்பும் பெற்றிருந்தார். * மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ் சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்' என்ற தன்மையில் அவர் கருமமே கண்ணுக உழைத்தார். சில சந்தர்ப்பங்களில், அவருடைய வெறி வேகம்’ மற்றவர்களால் அங்கீகரிக்க முடியாத அளவு தீவிரம் பெற்றிருந்தது. ஒரு நாள் நாதன் இயக்கப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, அவருடைய அம்மாவுக்கு 'வாயுக் த்து’ என்றும் மிகுந்த வேதனை அனுபவிக்கிருள் என் றும் ஒரு ஆள் வந்து அறிவித்தான். உடனே போய் அவளைப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு எண்ணம் எழவில்லை. சோடா வாங்கிக் குடிக்கச் சொல்லு" என்று, வந்த ஆளே அனுப்பி விட்டார் தொண்டர். போய், என்ன செய்கிறது என்றுதான் பார்த்து விட்டு வாருமேன் 1’ என்று ஒருவர் சொன்னர். 'வயசாயிட்டுது. அடிக்கடி ஒண்ணு இல்லாவிட் டால் ஒண்னு வந்துகொண்டே இருக்கும். நம்ம வேலை யைப் போட்டுவிட்டு ஒட முடியுமா !' என்று நாதன் சொல்லியதைக் கேட்டதும், அவர் அருகே நின்றவர்கள் "என்ன, இவர் இப்படி இருக்கிருரே ' என்று எண்ணி ஞர்கள். - அவர்கள் அதைவிட அதிசயமும் வருத்தமும் கொள்ள வேண்டிய நிலை மறுநாளே ஏற்பட்டது. நாதன் இயக்க சம்பந்தமான முக்கிய அலுவல்மீது எங்கோ அவசரமாய்ப் போய்க்கொண்டிருந்தார். அவ ருடைய தாயார் மாரடைப்பினுல் மாண்டு விட்டாள் என்ற செய்தி அவருக்குக் கிடைத்தது. அவர் ஒருகணம் பிரமை கொண்டவர்போல் காணப்பட்டார். கண்களே மூடிக்கொண்டு, தலையைக் கையினல் பற்றியவாறு,