பக்கம்:வீடும் வெளியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 莎器’ அவன் வருவானே மாட்டானுே என்ற கவலே. அவனுடைய அம்மாவைவிட அன்னத்துக்கு அதிக மிருந்தது. அவள் ஏக்கத்துடன் ஒரே இடத்தில் அமர்ந்: திருக்கவோ நிற்கவோ நிலை கொள்ளாமல், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள் ஜன்னலின் பின்னே, தெருவை நோக்கியவாறு காத்து நின் ருள். அவன் வருவது கண்ணில் பட்ட உடனேயே, அத்தான் வந்தாச்சு! அத்தான் வந்தாச்சு!" என்று சிறுபிள்ளை மாதிரி உற்சாகத்தோடு கூவிக் கொண்டு உள்ளே ஒடினுள். ஒரு அறையில் படுத்துக் கிடந்த பர்வதம் வேகமாக எழுந்தாள். 'வந்து விட்டான” என்று கேட்டபடி பரபரப்பாக முன் பக்கம் செல்ல ஆர்வம் காட்டினுள். 'அத்தை, மெதுவா! மெதுவா!' என்று அன்னம் விரைந்து பெரியவளின் கையைப்பற்றிக் கொண்டாள். அத்தை கீழே விழுந்து விடுவாளோ என்ற பயும் அவளுக்கு. இரண்டு பேரும் முன் அறைக்கு வருவதற்கும், காந்திமதிநாதன் உள்ளே அடி எடுத்து வைப்பதற்கும் சரியாக இருந்தது. வாய்யா!' என்று அன்பாக அழைத்த, தாயின் கண்கள் பனித்தன. உறுதியாக இருந்த அம்மா உடல் சில வாரங்களிலேயே உருக்குலைந்து, அவள் கிழவி யாகி விட்டது போல் காட்சி தரும்படி மாறிப் போன தைக் கண்டதும் அவனுக்குத் துக்கம் மேலிட்டது எதுவும் பேச இயலாதவாறு தொண்டை அடைத்துக் கொண்டது.

  • ன்ன்ன காந்தி, பேசாமலே நிற்கிறே? ஊம். எப்படி இருந்த பிள்ளை கறுத்து மெலிந்து ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப் போனியே! உம், விதிநாதன் படுத்துற பாட்டுக்கு உன்னைக் குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்?' என்று துயரம் நெஞ்சை அழுத்த், தீனமாகப் பேசினுள் தாய்.

அத்தானை நேராகவும், ஒரக் கண்ணுலும் பார்த்து மகிழ்ந்த அன்னம் உள்ளே சென்று ஒரு தட்டில் உப்பு மாவும், ஒரு தம்ளரில் காப்பியும் எடுத்து வந்து அவன்