பக்கம்:வீடும் வெளியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் - 6毒。 பொழுது மகனின் பேச்சு அவர் செவிகளைத் தாக்கியது. உடம்பெரிச்சலிலும் உள்ளக் கொதிப்பிலும் சூடுற்றி ருந்த முதலாளி ஆத்திரத்தோடு வார்த்தைகளே வீசினர். - அப்பொழுதுதான் கீழே உட்கார்ந்த காந்திமதி: நாதன் விருட்டென்று எழுந்தது நின்ருள். அன்னம் அறைக்குள் பதுங்கிக் கொண்டாள். பர்வதம் சிரமத்தோடு எழுந்து நின்ருள். அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று அவளையே பார்த். தான் காந்தி. ஏண்டா இங்கே வந்தே கோயிலுக்கு வந்த கும்ப வோடு நீயும் பஜனை பாடிகிட்டு நேரே போக வேண்டி பதுதானே?' என்று செந்தில்நாயகம் சீறிஞர். 'வீட்டுக்கு வந்த பிள்ளையை நீங்க பேசுற அழகு நல்லாத்தானிருக்கு’ என்று குறுக்கிட்டாள் தாய். 'அன்னைக்கு போடா வெளியே என்றதும் ரோஷ மாப் போனரே! அந்த ரோஷம் என்றைக்கும் இருக் கணும் அல்லவா? வீட்டு ஆசை அதுக்குள்ளே வந்து விட் டதே' என்று முதலாளி கேலியாகப் பேசினர். "ஆசை மீறிப்போய் நான் வீட்டைத் தேடி வர வில்லை' என்று காந்தி சொன்னன். பின்னே? பிழைப்பு வறுத்தெடுக்குதாக்கும்? அம்மாகிட்டே கெஞ்சி ஏதாவது ரூபாய் வாங்கிப் போகலாமின்னு வந்தியா? ஒவ்வொரு வார்த்தையும் குத்துகிற ஈட்டிபோல் பாய வேண்டும் என்று திட்ட மிட்டுப் பேசுவது போலவே அவர் சொல்லெறிந்தார். "எனக்குப் பணம் காசு எதுவும் தேவையில்லை. அம்மா பார்க்கணும்என்று விரும்பினள். அவள் விருப்பத் தைத் தட்டக்கூடாது என்று.' 'அடா அடா . எவ்வளவு அருமையான சத்புத்தி ரனடா அப்பா!' என்று கெண்டை பண்ணினர் தந்தை.