பக்கம்:வீடும் வெளியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

off; வீடும் வெளியும் பர்வதம் பேசாமல் நிற்க விரும்பவில்லை, நான் தான் அவனே வரச்சொல்லி ஆள் அனுப்பினேன். ரொம். காலம் உசிரோடு இருக்கமாட்டேன்னு எனக்கே w து. சாகிறதுக்கு முந்தி அவனைக் கண்டு பேசணு மனசு துடிச்சுது...' என்று இழுத்து இழுத்துச் சொன்னுள் அவன். "சரிதான். இப்ப மனசு குளிர்ந்து விட்டதா? இனிமேல் நிம்மதியாச் சாகலாமாக்கும்!” என்றவர் உட னேயே தனது சுய உருவைக் காட்டலானர். "சீ போ, புத்தி கெட்டவளே! அந்த உருப்படாக் கழுதையைப் அக்கிற ஆசையை விட்டுவிடு என்று ஆயிரம் தடவை சொல்லியாக்க, உனக்கும் என் பேச்சை மதிக் ணுமின்னு தோணலே. இல்லையா? ரொம்ப அதிசய கான மகனே பெத்து வச்சிருக்கே, அவனைப் பார்க்காவிட் டால் கண்ணு பூத்துவிடுமாக்கும்' என்று எரிந்து விழுந் தார் அவர். பர்வதம் பெருமூச்செறிந்தாள். அவன் என்ன சூதாடிச் சொத்தை எல்லாம் நாசமாக்கிப் போட்டாளு? இல்லே, தேவிடியாக்குடி அங்கே இங்கே என்று பணத்தை வாரி இறைத்தாளு?’- பொறுத்துப் பொறுத்து, உளம் குமைத்து குமுறிக் கொண்டிருந்த அன்னை இன்று உணர்ச்சி வெறியோடு தன் மகனுக்காகப் பேச முன் வந்தான். ஆணுல் முதலாளி அவள் உணர்ச்சிகளையோ, பாகத் துடிப்பையோ பெரிதுபடுத்தத் தியாராக இல்லை. "அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் பேச்சை மதிக்" காமல், எனக்கு எதிராகவே காரியங்கள் செய்கிற மகன்' எனக்கு வேண்டாம். என் வீட்டை மிதிப்பதற்கு வ்ேண்' டிய தகுதிகளை அவன் பெறவில்லை. மேலும் மேலும் அவன் தன் போக்கிலேயே செயல் புரிந்து கொண்டு போருன். அவன் இனி இந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது. என்னிடமிருந்து அவன் எதையும் எதிர்பார்க் கவும் கூடாது' என்று அவர் காட்டுக் கூப்பாடு போட்டார்.