பக்கம்:வீடும் வெளியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 67 அதற்குப் பின்னரும் காந்திதான் அங்கே நிற்க விரும்புவான என்ன ? மெளனமாக வெளியே நடந் தான். அவன் பக்கமே ஏக்கப் பார்வை வீசி, மறைந்தும் மறையாமலும் நின்ற அன்னத்தையோ, அம்மா அகி லாண்டேஸ்வரி, எனக்கு ஏன் இந்தச் சோதனையா?” என்று தலையில் கை வைத்துக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்ட தாயையோ அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. - மக்களில் ஒரு பிரிவினருக்கு ஆடைத்து வைக்கப்பட் டிருந்த ஆண்டவனின் ஆலயம் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்ட புனித நாளிலே, தன் தந்தையின் வீடு தனக்கு நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்டது காலத் தின் விசித்திரமான விளையாட்டுகளில் ஒன்றே ஆகும் என்று அவனுக்குத் தோன்றியது. கலாதேவனின் சித்து விளையாடல்களைச் சிந்தித்தவாறே அவன் தனது வழியே சென்ருன். 14. சொல்லும் செயலும் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறவர்கள் ஒரே வேகத்தில் தங்கள் யாத்திரையைத் தொடர்வது சாத்திய மாக இருப்பதில்லை. வேகமாகவும், மெதுவாகவும், உற். சாகத்தோடும். சோர்ந்தும், மீண்டும் ஊக்கம் பெற்றும் தான் மேலே மேலே செல்ல முடிகிறது அவர்களால். லட்சிய உறுதி பூண்டு, முன்னேறுகிற படை ஒரே சீராகச் சென்று வெற்றியைத் தொடுவதும் இயல்பாக நடைபெறுவதில்லை. அதன் இயக்கத்திலும் வேகமும் தேக்கமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. அதே நியதிதான் நாட்டின் விடுதலைக்காகப் போராடத் துணிந்த இயக்கத்தின் செயல் முறையிலும் தென்பட்டது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில், குபீரென வெடித் தெழுந்த புத்துணர்ச்சியும், செயலூக்கமும், மறியல்