பக்கம்:வீடும் வெளியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் శ్రీ போஜன"த்தைச் சிறப்பாக செய்தார்கள். அலுவல கத்தில் கீதை, ராமபக்திப் பாடல்கள் முதலியவைகளை வாசிக்க ஆரம்பித்தார்கள். பெரும் பேச்சு வீரர்களாக விளங்க ஆசைப்பட்ட அநேகருக்கு இவர்களுடைய செயல் வேகம் எரிச்ச லூட்டியது. ‘இதென்ன, ஆபீசை பஜனை மடமாக மாற்றுகிறீர்களே?' என்று சிலர் எதிர்ப்புகள் காட்டி ஞர்கள். ஒழுக்கமும் கட்டுப்பாடும் கண்டிப்பாக அனுஷ்டிக் கப்பட வேண்டும் என்று காந்தி போன்ற தொண்டர்கள் வற்புறுத்தினர்கள். உற்சாகிகள் சிலர் எல்லேமீறிங் போகிறபோது அவர்கள் அறிவுரை புகட்ட முன் வந்தார்கள். - ஒரு இடத்தில் தொண்டர்கள் சிலரும் ஊர்க்காரர்கள் பலரும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்திவிட்டுத் திரும்புகையில், ஒரு ஒட்டலில் புகுந்து விருப்பம்போல் உணவு உண்டு முடித்தனர். பிறகு மேஜை முன் அமர்த் திருந்த ஒட்டல் முதலாளியிடம் வந்து நாங்கள் என் லோரும் காந்தி பக்தர்கள். நாங்கள் சாப்பிட்டதை காந்தி கணக்கில் எழுதிவிடும்’ என்று கூறிவிட்டு காக கொடுக்காமலே வெளியேறிஞர்கள். காசு கோடுக்க வேண்டுமே என்று அவர்கள் கவலைப்படவில்லை. தாங்கள் சாப்பிட்டதற்கு காசு கொடுக்காமல் போவது தர்மம் அல்ல, நியாயமும் ஆகாது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படவே இல்லை. இந்த விவகாரத்துக்கு காநதிஜி பெயரை இழுப்பது, மகாத்மாவின் உயர்வுக்கு இழுக் குத் தேடுவதாகும்; விடுதலை இயக்கத்துக்கு மாக ஏற். படுத்துவதாகும் என்று அவர்கள் கருதவில்லை. அதற்கு மாருக, தங்கள் வீரப்பிரதாபம்’ பற்றிம் பெருமையாகப் பேசலானர்கள். இவ்விஷயம் காந்திமதி நாதனுக்கும் மிகுந்த வருத்தம் தந்தது. அவனும் தொண்டர் நாதனும் சம்பந்தப்பட்டவர்களின் போக் கைக் கண்டித்துப் பேசினர்கள். இவ்விதம் நடந்து கொள்ளக்கூடாது என்று போதித்தார்கள். வீ. வெ. 5-445