பக்கம்:வீடும் வெளியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் *蚤 பைத்தியக்காரத்தனம் நிறைந்தவையா என்று கேட்டது, காந்திமதிநாதனின் சிந்தனே ஆன்ம உயர்வுக்காகவும், மனித குல சேவைக்காகவும் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை எத்தனையோ பேர் இருந்திருக்கிருர்களே? இன்றும் அவ்வித அறநெறிகளில் ஈடுபட்டு, தங்கள் காலத்தையும் உழைப்பையும் பூரணமாக அவற்றிலேயே செலுத்துகிற வர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தானே இருக்கிறது? அவர்கள் எல்லோரும் வாழத் தெரியாதவர்களா? -இப்படிக் கேட்டது அவன் அறிவு. வாழ-அதாவது, பெரும்பாலான ம க் க ளி ன் எண்ணங்கள், ஆசைகள் காட்டுகிற வழியிலே வாழ்க்கை நடத்துவதற்கு விரும்பாதவர்கள் அவர்கள். அந்த வித மான சராசரி வாழ்க்கையிலே சாரமில்லை. தேடிச்சோறு நிதம் தின்று, சின்னஞ்சிறு கதைகள் பல பேசிப் பின் மாயும் வேடிக்கை மனிதர்களைப்போல நானும் வாழ வேண்டுமா என்ற மன உளைச்சலும், உணர்வுத் துடிப் பும், சிந்தனை ஒட்டமும் இவர்களே எப்படி எப்படியோ செயல் புரியத் தூண்டுகிறது. பெரும்பாலான மனிதரின் சகஜமான வாழ்க்கையை அர்த்தமற்றது என்று இவர்கள் கருதுகிருர்கள். இவர் களுடைய போக்கு விபரீதமானது. வேதனை தருவது. அனுவசியமானது என்று மற்றவர்கள் நினைக்கிருர்கள். இதற்கு என்ன செய்வது? காந்தியின் மனம் சில சமயம் குழம்பத்தான் செய்கிறது. தனது எண்ணக் குழப்பங்களையும், உணர்ச்சி அலை களையும், மனவேதனைகளையும் ஒருவாறு அடக்கி அமைதி பெறுவது சாத்தியம் என்று அவனுக்குப் படவில்லை. ஆளுல் அவற்றை மறப்பதற்கு, நல்ல புத்திகங்களைப் படிப்பதும் சோம்பலுக்கு இடம் கொடுக்காது, உழைத் துக் கொண்டே இருப்பதும் அருமையான வழியாகும் என்று அவன் சதா எதையாவது செய்து வந்தான். அல்லது எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப் பதில் மூழ்கிவிடுவ்ான்.