பக்கம்:வீடும் வெளியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穿数 வீடும் வெளியும் விடுதலை இயக்கம் மந்தகதியில் செயல் பட்டுக் கொண்டிருந்தது. மறியலைப் போல், பரபரப்பும் சாதாரண மக்களுக்குக் கூட உற்சாகமும் ஊக்கமும் உணர்வின் எழுச்சியும் தரக்கூடிய செயல் திட்டங்கள் எவையும் தலைகாட்டவில்லை. ஆயினும், மக்களிடையே தேசபக்தியும் சுத்ந்திர உணர்ச்சியும் உண்டாவதற்காக, தகரங்களிலு: கிராமங்களிலும் பிரசார வேலைகள் தீவிர அாக நடைபெற்து வந்தன. வெவ்வேறு இடங்களிலிருந்து தலைவர்கள் வந்தார் கள்: பேசிஞர்கள். உபசாரங்களை ஏற்றுக் கொண்டு போஞர்கள். அதல்ை, மேடை முதலாளி' பிறவிப் பெருமாளுக்கும் இன்னும் ஒன்றிரண்டு பெரிய தலைகளுக் கும் வேலே இருந்துகொண்டே வந்தது. தொண்டர் களுக்கும் வேல் மிகுதியாக இருந்தது. திருநகரிலும் சில நல்ல பேச்சாளர்கள் தோன்றினர். கள் பொதுஜனத்தை வசீகரிக்கும் விதத்தில் பேசும் திறமையை வளர்த்துக் கொண்டவர்கள். அவர்களுக்கும் கவனிப்பு கிட்டத் தொடங்கியது. வெளி ஊர்களிலிருந். தும் அழைப்பு வத்தது. காத்திமதிநாதனும் பேச்சாளனவதற்கு முயற்சிகள் செய்து வந்தான். நாவன்மை படைத்த சில் சொற். வர்கள் போல, தான் சிறந்த பேச்சாளன் ஆகி விட இயலாது என்று அவனுக்கே பட்டது. இருந்தாலும் ஒரளவுக்கு, மக்களுக்குப் பிடித்தமான முறையில் பேசும் ஆற்றலைப் பெற்றுவிட வேண்டும் என்று அவன் ஆசைப் பட்டான். - அவனும் சில தொண்டர்களும் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று இயக்கப் பணி புரிவதில் அயராது. உற்சாகம் காட்டி வந்தார்கள். விடுதலை இயக்கத்துக் காக நிதி வசூல் செய்ய வேண்டிய கடமையும் அவர் களுக்கு வந்து சேர்ந்தது. நாட்டினர் மனமுவந்து பொருளுதவி செய்தார்கள். திருநகரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் மிகுதி பாகவே பணம் வசூலாயிற்று.