பக்கம்:வீடும் வெளியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 7器 அதன் பிறகுதான் அவனுக்கு விழிப்பு உண்டா யிற்று. அப்பாவுக்கு விஷயம் தெரிந்தால், அவர் எரிந்து விழுவதோடு, உதை கொடுக்கவும் தயங்க மாட்டார் என்று அவன் நினைத்தான். இது பொதுப் பணம்: விடுதலை இயக்க வேலைகளுக்காக, கட்சியின் பெயரால் வசூலிக்கப்பட்ட நிதி ஆயிற்றே! இதை சூதாடிக் காலி பண்ணிய விஷயம் தெரிந்தால் அவர்தான் சும்மா இருப்பாரா? கட்சியினர்தான் விட்டு விடுவார்களா? திருமலையின் உள்ளம் பதை பதைத்தது. அவன் நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். அதைத்தான் செய்ய முடியும். வேறு வழி யில்லை! கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை விற்று, வடக்கே போகும் ரயிலில்’, மிகத் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு, இரவோடு இர வாகப் போய்விட்டான். அவன் போன விஷயம் எல்லோருக்கும் தெரி: வந்தது. எங்கே போஞன், ஏன் போளுன் என்பது எவருக்கும் தெரியாது. 'திருமலை நிதிப் பணத்தை அமுக்கிக் கொண்டு கம்பி நீட்டி விட்டான்' என்று ஒருவர் திரியைப் பற்ற வைத்தார். சுர் சுர் என்று. வத்தி எரிந்தது. "அவன் சும்மா போகவில்லை. குட்டி ஒருத்தியையும் கூட்டிக் கொண்டு போய் விட்டான்!” என்று தன் கைச் சரக்கையும் கலந்து. வதந்திக்கு வர்ணப் பள பளப்புச் சேர்த்தார் ஒருவர். வெறும் செய்தியில் உயிர் எங்கே இருக்கிறது? இப்படிப் பசை பூசி, நகாஸ் வேலை செய்து உலாவ விட்டால்தானே ஜோராக இருக்கும்? சுவை பெற்ற செய்தியை எல்லோரும் ரசித்தார்கள். மேடை முதலாளி'க்கு நல்ல விளம்பரம். மகன் தந்தைக்கு ஆற்றிய உதவி அது so இச் செய்தி மேடை முதலாளி'யை ஒருவிதமாக அதிர வைத்தது. காந்திமதிநாதனுக்கு வேறு ரகமான அதிர்ச்சி தந்தது.