பக்கம்:வீடும் வெளியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7認 - விடும் வெளியும் அவன், அவரிடம் எதிர் உரை கூறவில்லை. அவரிடம் என்ன் பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்று ஒதுங்கி விட்டான். பணம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம்; செய்வதற்கு எண்ணமும் துணிச்ச லு:மின் தாமாகவே வந்து சேரும் என்று காந்தி எண்ணியது மிகவும் சரியே என்று நினைக்கும்படி மற்ருெரு காரியமும் திகழ்த்தது. மகனைப் பிரிந்த ஏக்கத்தில் வாடி உருக்குலைந்து கொண்டிருந்த காந்தியின் தாய் ஒருநாள் அதே வியாதி. யால் செத்தின் பேசினுள். தந்தை மகனுக்குச் சொல்லி அனுப்பவுமில்லை; அவன் வந்துதான் பர்வதத்தின் உடல் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாக வேண்டும் என்று. காத்திருக்கவும் இல்லை. அவர் வைராக்கியம் அவருக்கு. தாய் இறந்த துக்கம் காந்தியை வருத்தியது. தந்தையின் புறக்கணிப்பு அவன் உள்ளத்தில் உணர்வுச் சலனம் ஏற்படுத்தினுலும், அதற்காக அவன் கலக்கம் கொள்ளவில்லை. - ஆணுல், பின்னர் துக்கத்தின் தொடர் அலைகள் போல் வந்து கொண்டிருந்த செய்திகள் அவனுக்கு. மிகுந்த மனத்துயர் அளித்தன. "செந்தில்தாயகம் மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிருர், பெண் தேடி ஆகிறது' என்று கேள்விப்பட்டான் அவன். பர்வதம் போய் விட்டாள். அவள் பெற்ற பையன் அவளுக்கு முன்னதாகவே போய் விட்டான். ஆமாம், என்னைப் பொறுத்தவரை, அவன் செத்துத்தான் போளுன்’ என்று அவர் சொன்னதாக வும் காந்தியின் காதில் செய்தி விழுந்தது. . "சொத்து, பணத்தை எல்லாம் அனுபவிக்சு வாரிசு. வேண்டாமா? வாரிசு உண்டாக்குவதற்காகத்தான் நான் திரும்பக் கல்யாணம் செய்து கொள்கிறேன்’ என்று: முதலாளி செந்தில்நாயகம் அறிவித்தார். அவருக்கு வயது என்ன-ஐம்பதோ ஐம்பத்து இரண்டோதான். அவர் ஏன் திருமணம் புரிந்து கொள்ளக்கூடாது?