பக்கம்:வீடும் வெளியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் of தல்ல துணிகளை வாங்கிக் கட்டவேண்டாம், துணி வாங்க வேண்டும் என்று கடைக்கு வருகிறவர்களை ஏன் வழி மறிக்க வேண்டும்?' என்றும் சீறிஞர். அவரைப் போல் எண்ணி வாளா இருந்து விடவில்லை. அரசு. மக்களின் வலிமை மிகுந்த எதிர்ப்பை உணர்ந்த ஆட்சி விழிப்புற்று வீறுகொள்ளும் சக்தியை அடக்கிவிட முயன்றது. அடக்கிவிடலாம் என்று ஆசை கொண்டது. வக்கீல் மனைவி மங்கையர்க்கரசியும், டாக்டர் மனேவி பாக்கியமும், மற்றும் பலரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நின்ற இடத்திலே வேறு சிலர் வந்து வேலை யைத் தொடர்ந்தார்கள். அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந் நிகழ்ச்சியிலே பரபரப்பூட்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மத்திப்ான வேளே. பள்ளிக்கூடங்கள் இடை வேளைக்கு விட்டிருந்த நேரம். பிள்ளைகள் சாரி சாரியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கடைவீதியில் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. அப்போது நீட்டி முழங்கும் இரட்டைச் சங்கின் ஒலி எழுந்து மிதந்தது. 'பாடை வருது. சவம் வருது’’ என்ற பேச்சு அங்கும் இங்குமாக எழுந்தது. பிணத்தை எடுத்துச் செல்லும் ஊர்வலம் விரைவாக தடு வீதியில் வந்து கொண்டிருந்தது.

  • சுடுகாட்டுக்கு பிணத்தை இந்த வழியாக எடுத்துச் செல்வது கிடையாதே? இது என்ன வழக்கம் இல்லாத வழக்கமாக இருக்கிறது' என்று சிலர் முண முணத் தார்கள். -

கொள்ளிச்சட்டி, குடம், சங்கூதல் முதலிய சகல சம்பிரமங்களோடும் வந்த சவ ஊர்வலம் செந்தில் நாயகத்தின் கடை முன்னே நின்றது. பாடையைச் சுமந்து வந்தவர்கள் மெளனமாக அதை நடுத்தெரு விலேயே இறக்கினர்கள். சட்டி சுமந்தவனும், குடம் எடுத்தவனும் ஆதைச் சுற்றிவந்தார்கள்: "சவத்துக்குத்