பக்கம்:வீடும் வெளியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。諡爵 வீடும் வெளியும் அவன் தாய் உளம் நொந்து வேதனைத் தீயில் கருகி மெலிந்து செத்துப் போனதற்கு அவனே காரணம் என்று அவன் நினைக்காமல் இல்லை. அவன் வீட்டோடு இருந்து, சாதாரண வாழ்வு முறைகளே அனுஷ்டித்து வந்தால், அவளுக்கு மன நோயும் உடல் நோயும் ஏற் பட்டிருக்காது; சாவும் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்காது என்ற்ே அவனுக்குப்பட்டது. ஆனல், இவை எல்லாம் தவிர்க்க இயல்ாதிவை; எது எந்திக் காலத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அது அவ்விதமே நடந்து முடியும் என்றும் அவன் எண்ணினன். லட்சியப் பாதை புல்லும் மலர்களும் படிந்த மெது வழி அல்ல: கரடு முரடானது. மேடு பள்ளங்கள் கொண்டது. கஷ்டப்படுத்தக் கூடியதுதான். அதில் நடந்து முன்னேறுவது என்று தீர்மானித்து விட்டால், எதையும் பொருட்படுத்தாமல் மேலே மேலே போக வேண்டியதுதான் என்று அவன் தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டான். w தொண்டர் நாதன் போன்றவர்களுடன் பேசுகிற போது, அவர்கள் அருகில் அவன் எவ்வளவோ சாதாரண மானவன் என்ற நினைப்பே காந்திமதிக்கு எழும். தொண்டர் நாதனுக்குக் குடும்பச் சுமை இருந்தது. மனைவியும் மக்களும் அவரை நம்பி, அவர் உழைப்பால் வருவதை எதிர்பார்த்து அன்ருட வாழ்க்கையை கழிக்க வேண்டியிருந்தது. ஆகவே, அவருக்குப் பொறுப்பு அதிகம் உண்டு. ஆனல், அவர் அவற்றை எல்லாம் பெரிது படுத்தவில்லையே. மன உளைச்சல் வளர்த்து, செயல்திறம் இழந்து விடவில்லையே! காந்திமதிநாதனுக் குக் குடும்பமும் இல்லை. அவனை நம்பி, அவன் பாடு பட்டுச் சம்பாதித்துப் பணம் கொண்டு தர வேண்டும் என்று எதிர்நோக்கி, ஒரு நபர்கூட காத்திருக்கவில்லை. அவனுக்கு அவனே ராஜா. அவனே அவனுக்குத் துணை. அப்படி யிருக்கையில் வீணுகக் கவலைகள் வளர்ப்பதற்கு அவசியம் என்ன இருக்கிறது? காந்திமதிநாதன் லட்சியப் பணியில் மேலும் தீவிர ஆர்வம் காட்டலானன். அவன் உழைப்பும், அது