பக்கம்:வீடும் வெளியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 岔赛* சம்பந்தமான அலேச்சலும் அவனுக்கு அமைதி தருவது போல் அமைந்தன. சா தா ர ன வாழ்க்கையின் வெறுமையை, அர்த்தமிலாத் தன்மையை நீக்கி, பெருமையும் பயனும் தருவதாகவும் அவை விளங்கின. அதிகமாக அலைந்து திரிந்து உழைப்பதற்கும், ஊக்கத்தோடு பிரசாரம் செய்வதற்கும் வகை செய்வ தாய் தேர்தல் வந்தது. விடுதலைக்காகப் போராடுகிற வர்கள் ஆட்சி முறையில் பங்கு பெறுவதற்குக் கிட்டும் முதல் வாய்ப்பு அது. அதனால் தேசீய இயக்கத்தினரிட மும் மக்கள் மத்தியிலும் உற்சாகமும் உவகைப் பெருக் கும், உணர்ச்சித் துள்ளலும் அதிகமாகத் தலை தூக்கி யிருந்தன. அவ்விதத் துடிப்போடும் துள்ளலோடும் ஓடி ஆடித் திரிந்து கொண்டிருந்த காந்திமதிநாதனுக்கு திகைப்பும் அதிர்ச்சியும் தந்த ஒரு சம்பவம் தற்செயலாக நிகழ்ந் தது. அது அவனுக்கு ஒரு பெரிய சோதனையாக இருந் தது. அது மட்டுமின்றி, அவன் எண்ண வேகத்துக்குச் சூடேற்றுவதாகவும் அமைந்தது அந்நிகழ்ச்சி. காந்திமதிநாதன் ஒரு கிராமத்தில் நடைபெற்ற மது விலக்குப் பிரசாரக் கூட்டத்தில் கலந்து விட்டு, திருநகருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அவ னுடன் சென்ற அன்பர்கள் வெவ்வேறு பக்கம் போய் விட்டார்கள். ஒவ்வொருவருக்கும் எ த் தி னே .ே யா அலுவல்கள். காந்திக்கு அவசர அவசியமான காரியம் எதுவும் இல்லை. இயற்கை வனப்பும் இரவின் எழிலும் அவன் உள்ளத்துக்கு இதமாக இருந்தன. அவன் மெது வாக நடந்து நகரை அடைய எண்ணிஞன். குறுக்கே ஆறு வந்தது. ஆற்றங்கரை மணல் அவனுக்கு மெளன வரவேற்பு அளித்தது. அவன் மணலில் சுகமாகப் படுத்து விட்டான். நேரம் போனதே தெரியாமல் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தான். இரவு வானமும், அங்கே அளவில்லாமல் வாரி இறைக்கப் பட்டிருந்த ஒளி மணிகளும் அவ்ன் கண்களுக்கு இனிய விருந்தளித்தன. மென்காற்று தாயின் கருணையைப்