பக்கம்:வீடும் வெளியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் . 恐金 யார் என்றுதான் பார்க்கலாமே என்ற எண்ணம் துண்டவே, யாாது?’ எனக் கவிஞன். ジ கவிராயர் இல்லையா அது?’ என்ற எதிர்க் கேள்வி அவனே நோக்கி நகர்ந்து வந்தது. ஆடி அசைந்து சிவப்புப் பொறி, கொள்ளிவாய் பிசாசின் சின்னம் அல்ல; தன்னைத் தேடி வருகிற ஆசாமியின் சிகரெட் நெருப்புதான் என்று அவன் வே டி. க் ைய க நினைத்தான். "நான் கவிராயர் இல்லையே! என்று காந்திமதி அறிவித்த போது, அவனை இனம் புரிந்து கொள்ளும் அளவுக்கு மற்றவன் நெருங்கி வந்துவிட்டான். ஒ காந்திமதியா! உற்சாகமான பாட்டு கிளம்பவே கவி ராயராக்கும் என்று நினைத்தேன். குரலும் கேட்ட குரலாகத்தான் ஒலித்தது. இந்த நேரத்துக்கு ஆற்றங் கரைக்கு வந்து வேறேயாரு இப்படி ஜாலியாகப் பாடப் போருங்கன்னு தோனுச்சு' என்ருன். காந்திமதியும் அவனைக் கண்டு கொண்டான். சோமுவா ஏது இவ்வளவு தூரம்?’ என்ருன். "உன் கிட்டே நான் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது நில்லு, கால் அலம்பி விட்டு வருகிறேன்’ என்று கூறி சோமு தண்ணிரை நோக்கி நடத்தான். திரும்பி வந்ததும் உம் போவோம்’ என்று காந்தி யோடு நடக்கலானன். செளக்கியமெல்லாம் எப்படி? உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நீ காலேஜிலே சேர்ந்துவிட்டே. அப்புறம் நாம் எங்கே சந்திக்கிறது: நீ தேசபக்தனுக உழைக்கிறதா ரெண்டொரு சமயம் கேள்விப் பட்டேன். உம், நிலைமை எல்லாம் எப்படி இருக்குது?’ என்று சளசளக்கத் தொடங்கிவிட்டான். சோமு காந்திமதிநாதனுடன் சில வருஷங்கள் படித்தது உண்டு. காந்தி பெரிய வீட்டுப் பையன்’ என்று தெரிந்து, அவன் தயவை நாடி அவ்வப்போது ஆவனைச் சுற்றி வட்டமிட்டது தவிர, இரண்டு பேருக்கும் பிரமாத நட்பு இருந்தது என்று கூறுவதற்கில்லை.