பக்கம்:வீடும் வெளியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் ඵ්ද්‍රි. அவன். அதன் பிறகு அவன் பார்வை சுவர்களில் தொங்கிய படங்களை ஆராய்வதில் ஈடுபட்டது. அவளோ அவனே நோக்கி நின்ருள். சோமு சட்டையைக் கழற்றிவிட்டு, வெறும் பனியன் அணிந்தவனுய் வந்தான். விபூதியை அள்ளிம் பூசிக்கொண்டு ஐயனே அப்பா!' என்று முணுமுணுத் தான். சந்திரா, இவர்தான் காந்திமதிநாதன். ரொம்ப பேமஸ் ஆகி வருகிருர். பெரிய இடத்துப் பிள்ளை. இவர் அப்பா பெரிய பிசினஸ்மேன் வருங்காலத்திலே இவர் பெரிய தலைவர் ஆலுைம் ஆகிவிடுவாரு. ஏன் ஆகக் கூடாது? இப்போ இவரும் நம்ம பிரண்டு. ஐயாம் பிள்ளையும் இவரும் பல வருசங்கள் சேர்ந்து படிச் சிருக்கிருேம். தெரிஞ்கக்க!” என்று அளந்து தள்ளினன். சந்திரா இளம்முறுவல் பூத்து ஒயிலாக அசைந்து. கொடுத்தாள். "இன்று உப்புமாதான். அவுங்களும் சாப்பிடலாமே என்று குரலில் குழைவு காட்டினுள். உள்ளே போளுள். "என் சிஸ்டர். சந்திரான்னு பேரு” என்று அந: வசியமாக அறிமுகம் பேசினன் சோமு. காந்தியின் மறுப்புரை எதுவுமே அவனிடம் எடு படவில்லை. அங்கேயே உண்டுவிட்டு அவ்வீட்டிலேயே உறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. காந்திமதிநாதன் கட்டில் தேவையில்லை, கீழே படுக்க ஒரு பாய் இருந்தாலே போதும் என்று உறுதி யாகக் கூறிவிட்டான். நல்ல சமுக்காளமும் அருமையான தலையணையும் கிடைத்துவிட்டன. அவனுக்கு அருகிலேயே இன்னுமொரு படுக்கை பரப்பப் பெற்றது. அதில் சோமு. படுப்பான் என்றுதான் அவன் நினைத்தான். துர்க்கம் அவனை விரைவிலேயே கிறக்கி விட்டது. சிறிது நேரம் சென்றிருக்கும். அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். அந்த அறையில் சிற்ருெளி சிந்தி மினுக்க முயன்று கொண்டிருந்தது ஒரு விளக்கு. ஆ ைந் வி. வெ. 6-445