பக்கம்:வீடும் வெளியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 廖亨 சஎன்னிடம் சொல்லலியே! நானும் கூடவே போயிருப்பேனே!” என்று முணுமுணுத்தான் அவன். உங்களைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுத்தான் போனுர். நீங்க ஏன் பயப்படுறிங்க?” என்று கூறித் தன் உடலை மோகனமாய் நீட்டி நெளித் தாள் அவள். அவளுடைய கைகள் அவனைப் பிடிக்க நீளுவது போல் நெருங்கின. அவன் பதறி எழுந்து நின்ருன் "உனக்கு இது நன்ருக இருக்குதா? உன் அண்ணனுக்குத் தெரிந் தால்...?” அவள் ரசித்துச் சிரித்தாள். 'அவர் என் அண்ணன் இல்லை. அவருக்குத் தெரியாமலா? அவருக்கு எல்லாம் தெரியும்' என்று சொன்னுள். எழுந்து உட்கார்ந்து, அவனையே பார்த்தாள். காந்திக்கு உண்மை பளிச்சிட்டது. சோமு பிசினஸில் புகுந்து விட்டதாகச் சொன்னுனே. இப்படியும் ஒ: பிசினஸ் பண்ணுகிருன்! இதன் மூலம்தான் அவன் வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொள்கிருளு: சே, என்ன பிழைப்பு! அவன் உள்ளம் நடுங்கியது. இனியும் அந்த இடத்தில் இருக்கக்கூடாது என்று அ வ ச ர ம் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு, வி ள க் ைக த் துTண்டினன். அவள் வேகமாக எழுந்து அவன் அருகே வந்தாள். 'இந்த நடுராத்திரியில் எங்கேபோகப் போlங்க” என்து கண்களைச் சுழற்றினுள். இடர் செய்யும் கண்கள் தன்னை இடறி விழும்படி செய்து விடும் என அஞ்சினன் அவன். இப்படி இருக்கும் என்று தெரிந்திருக்குமானுல் நான் சோமுகூட வந்தே இருக்க மாட்டேன்' என்று முனகிவிட்டு, தாழ்ப்பாளை வேகமாகத் திறந்து, தப்பி ஓடுகிறவன் போல் வெளியே பாய்ந்தான். அந்த அறையின் வசீகரத்தையும் வசதி யையும் வெளிச்சத்தையும் விட வெளியே கனத்துக்