பக்கம்:வீடும் வெளியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் சென்று விட்டான் என்ற உணர்ச்சியே காந்திக்கு ஏற். والتي سأستشه 18. தீவிரவாதி திருநகரை விட்டு வெளியேறிய நடராஜனுக்கு. இட்ைக்காலத்தில் எவ்வளவோ அனுபவங்கள் கிட்டியிருத தன. வெளியூர்களிலும் அவன் ஜவுளிக்கடை மறியலில் கலந்து கொண்டான். தடிஅடி பட்டான். கள்ளுக் கடை மறியலின்போது, குடிகாரன் ஒருவனல் பலமாகத். தாக்குண்டு அவன் ஆஸ்பத்திரியில் கிடக்க நேரிட்டது. குணமடைந்து அவன் வெளியே வந்த சமயத்தில், மறி" யல் போராட்டம் முடிவடைந்து விட்டது. அவன் பிறகு கட்சிப் பிரசாரணுகி, ஊர் ஊராக அலைந்து திரிந்தான். சிறிது கால சிறைவாச அனுபவமும் ஏற்பட்டது. சிறைக்குள் ஒடுங்கிக் கிடந்தபோது அவன் மிகுந்த ஞானம் பெற்று விட்டதாக நடராஜன் நண்பனிடம் சொன்னன். இயல்பான வாழ்க்கை முறைகளுக்கு முரண் பட்ட ஒரு சூழ்நிலையில் அடைபட்டுக் கிடக்க நேரிடு. கையில் மனிதரின் சிறுமைக் குணங்களும் சுயநலமும் மேலோங்கிச் செயல் புரிவதை அவன் உணர முடிந்த தாக அறிவித்தான். சிறைவாசம் ஒரு சிலரை ஞானிகளாகவும், தத்துவ தரிசிகளாகவும், தேர்ந்த சிந்தனையாளர்களாகவும்: மாற்றியிருக்கலாம்; இனியும் மாற்றலாம். ஆனல் மொத்தத்தில், பெரும்பாலானவர்களின் மனிதத்தன் மையை வற்றடிக்கும் அரங்கமாகவும், கடுமையான நோய்களைத் தரும் இடமாகவுமே சின்ற விளங்குகிறது. என்று நடராஜன் அபிப்பிராயப்பட்டான். "வெளியேயிருந்து உழைப்பில் ஈடுபடுத்த வேண்டிய அருமையான காலத்தை சிறைக்குள் கிடந்து வீணடிப் பதில் அர்த்தமே இல்லை. நாட்டு விடுதலைக்காகவும். மக்களின் உயர்வுக்காகவும் நாம் வெளியேயிருந்துதான் பாடுபட வேண்டும். சிறை வாழ்வை நாமாகவே