பக்கம்:வீடும் வெளியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 95ド விரும்பி ஏற்றுக்கொள்வது ஒரு வகை வீரமாகவும். தியாகமாகவும் போற்றப்பட வேண்டியதுதான். ஆனல் இந்தத் திட்டம் எனக்குப் பிடிக்கவில்லை' என்று அவன் திடமாக அறிவித்தான். நடராஜன் தீவீரமான செயல் முறைகளை ஆதரிப்ப வகை மாறியிருந்தான். மகாத்மா காந்திஜீயின் சாத்வீகப் போராட்டங்களின் மூலம் நாட்டுக்கு விடுதலை விரைவில் வந்து சேராது; பலாத்காரத் தாக்குதல்களும் சதித் திட்டங்களும் அனுஷ்டிக்கப் படவேண்டும் என்று வற். புறுத்தி வந்தவர்களின் கருத்துக்கள் அவனை வெகுவாசப் பாதித்திருந்தன. "சட்டசபையில் வெடிகுண்டு வீசிய பகவத்சிங் போல் இன்னும் பல வீரர்கள் தோன்ற வேண்டும். தமிழ். நாட்டிலும் வீரர்களுக்குக் குறைவு கிடையாது. முன் பு ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றவர் அஞ்சா நெஞ்சு. படைத்த தமிழர்தானே? அழிவு முறையில் இல்லாது, ஆக்க வழியிலும் எதிர்ப்பை வளர்த்து அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்யமுடியும். வெள்ளையருக்கு எதிராக, முதன் முதலாகக் கப்பல் ஒட்டி சுதந்திர உணர்வை மேலோங்கச் செய்த வ. உ. சி. யின் சேவை குறை வானதா?’ என்று அவன் உணர்ச்சிகரமாகப் பேசினன். "அயர்லாந்து சுதந்திரப் போராட்ட வரலாறு நமக்கு ஏன் வழிகாட்டக்கூடாது? இங்கும். சுதந்திர உணர் ச்சி உள்ளவர்கள் திடீரென ஒருநாள் போட்டி அரசாங்கம் அமைக்க வேண்டும்; தபால் நிலையங்களையும், ரயில்வேயையும் கைப்பற்றிக்கொண்டு, சர்க்காரைத் திணறடிக்க வேண்டும் ஆனல் காந்திஜீ தலைமையில் இவை எல்லாம் நடக்காது. அவர்தான் வீரத்துடிப்பு மிகுந்த சுபாஷ்சந்திரபோஸைக்கூட ஆதரிக்கவில்லையே!” என்ருன், காந்திமதிநாதன் நண்பன் கருத்துக்களை முழுமை யாக ஏற்றுக்கொள்ளவுமில்லை, அடியோடு மறுக்கவு மில்லை. "நாட்டின் நிலைமைக்கும், நமது கலாசாரத் துக்கும், மக்களின் சுபாவத்துக்கும், காலத்துக்கும்