பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வீரத் தலைவர் பூலித்தேவர்

வீரபாண்டியக் கட்ட பொம்மன் விடுதலைப் போரைத் தொடங்குவதற்கு நாற்பத்து நான்கு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் விடுதலைப்போர் தொடங்கிவிட்டது. தமிழக வரலாற்றைத் துருவி ஆராய்வார் இவ்வுண்மையை உணர்தல் உறுதி. அவ்வாறு வெள்ளே ஆட்சியை வோறக் களையப் போர்க் கொடி உயர்த்திய புண்ணியர்களுள் தலை சிறந்தவர் யூலித்தேவர். போர் துட்பங்களிலும் அரசியல் துட்பங்களிலும் இணேயற்ற அறிவும் ஆற்றலும் படைத்து விளங்கிய அப்பெருமகனுரைப் பற்றி இப்போது கிடைக்கும் குறிப்புக்களேத் தொகுத்து ஒருருவாக்கி ஆராய்வதே நம் முதன்மை யான நோக்கம். இதன் பயனுகப் பூலித்தேவரைப் பற்றிய வேறு பல செய்திகளும் உண்மை களும் விளக்கம் பெறுமாயின், அது தமிழன்னையின் உள்ளத்தைப் பெரிதும் குளிர்விப்பதாகும்.

18-ஆம் நூற்றண்டில் தமிழகம் எட்டுக் திக்கிலும் பற்றி எரியும் தீவாய்ப்பட்ட எழில் மிக்கதோர் அரண் மனேயாய்க் காட்சி அளித்தது. எரிந்து கொண்டிருந்த அவ்வரண்மனையில் பிடுங்கிய வரை யில் ஆதாயம் என்று ஊர்ப்பிடாரிகளும் ஒண்டவிந்த பிடாரிகளும் கருதின. நாளடைவில் ஒண்ட வந்த பிடாரிகள் ஊர்ப்பிடாரிகளையும் கொன்று விழுங்கிப்