பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வீரத் தலைவர் பூலித்தேவர்



* 2 வீரத் தலைவர் பூலித்தேவர் பின் ஏகாதிபத்தியம் என்னும் கோரக் கூத்தாடின. சுருங்கச் சொன்னால், இதுவே இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் இருள் சூழ்ந்த அவலம் நிறைந்த இரங்கத்தக்க நிலை என்னலாம்.

இருநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் பெரும் புகழுடன் விளங்கிய மதுரை நாயக்கமன்னர் ஆட்சி சந்தா சாகிபுவின் சதியால் அரசி மீனாட்சியின் தற்கொலையோடு கி. பி. 1736ல் முடிந்து போயிற்று. இதன் பின்னர்த் தமிழகத்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டற்காான் ஆயினன். சிறப்பாகத் திருநெல்வேலிச் சிமையின் திறைப் பணத்தை வாங்க மகாராட்டிரர்கள் தங்கள் அதிகாரிகள் வாயிலாக முனைந்கார்கள். 1744-ஆம் ஆண்டில் அன்வர் உத்தீன் கர்நாடகத்தின் நவாபுவாக்கப் பட்டதும் அவன் அதிகாரிகளும் திருநெல்வேலிச் சிமையை நோக்கிப் பணம் பறிக்கப் பயனப் பட்டார்கள். ஆம்பூர்ப் போரில் அன்வார் உத்தீன் கொலேயுண்டான். அதன் விளைவாக முகம்மது அலி ஆர்க்காட்டு நவாபுவாகப் பிரகடனம் செய்யப் பட்டான். அரசுரிமை பெற்ற முகம்மது அலி, கி. பி. 1751ல் திருநெல்வேலிச் சீமையில் கப்பப்பணம் வசூலிக்கத் தன் உடன் பிறந்தானகிய அப்துல் ாஹீமைப் படை திரட்டிச் செல்ல ஆணேயிட்டான். ஆனால், அப்படையெடுப்பால் பாளையக்காரர்களிட மிருந்து தம்படிகூடப் பெயரவில்லை. இக்கிலேயில் சந்தாசாகிபு முகம்மது அலிக்குப் போட்டியாகப் பாளையக்காரர்களைத் தன் பக்கம்