பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

வீரத் தலைவர் பூலித்தேவர்


களும் ஐந்நூறு சிப்பாய்களும் சிறைப்பட்டார்கள். உண்ண உணவும் பருக நீரும் இல்லாமல் நவாபு. வின் சேனை குற்றுயிருடையதாயிற்று. அதைக் காப்பாற்ற உணவுப் பொருள்கள் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டன. அதற்குக் காவலாகக் கும்பினிப் பட்டாளம் நிழல் போல : வந்தது. ஆயினும் என்ன! பொருள்கள் யாவும் பூலித்தேவர் உடைமையாயின,18

அடிபட்ட நாய் குரைப்பது போல மாபூஸ்கான் நெற்கட்டுஞ்செவ்வலை முற்றுகையிட்டான். மாவீரர் பூலித்தேவரிடம் மாபூஸ்கான் என்ன செய்ய முடி பம்? திருனெல் வேலியை நோக்கி வெறுங்கைய னாய்த் திரும்பினான். 19

எவ்விதப் பெருமுயற்சியுமின்றியே தமக்குக் கிடைத்த வெற்றிகளால் மிகுந்த ஊக்கமும் உவ கையும் கொண்ட பூலித்தேவர், தம் பலத்தை அதிகப்படுத்திக்கொள்வதில் காட்டம் கொண்டார். மூடேமியாவும் வடகரை முதலிய மேற்படாகைப் பாளையப்பட்டுக்களும் பூவித்தேவர் பக்கம் சேர்க் தன. இந்நிலையில் அவர் கீழ்ப்படாகைப் பாளையப் பட்டுக்களையும் தம்முடன் சேர்த்துக்கொண்டு ஆர்க் காட்டு நவாபுவையும் ஆங்கிலக் கும்பினியையும் வன்மையாக எதிர்த்து விரட்டத் திட்டமிட்டார்; அதன் பொருட்டுக் கீழ்ப்படாகைப் பாளையங்களுக் குத் தலைவராய் இருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கட்ட பொம்முவை மிகவும் வேண்டிக்கொண்டார். ஆனால், கட்டபொம்மு அதற்குச் சிறிதும் இசையவில்லை. அவரைப் போலவே எட்டையபுரத்தாரும் இணங்க வில்லை ; 'எங்கள் ஆட்கள் கப்பப் பாக்கிக்காகத்