பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

19



வீரத் தலைவர் பூலித்தேவர் #9 பட்டது. கும்பினியிடம் வீரப் பதக்கம் பெற்று, அதன் கண்ணில் இணேயில்லாத் தளபதியாய்க் காட்சியளித்த கான் சாகிபு, சென்னே நகர் நோக்கிக் காற்ருய்ப் பறந்தான். ஆங்கிலேயரை எதிர்த்து ஆங்காங்குப் பிரெஞ்சுக்காரர்கள் சிறு சிறு வெற்றி பெற்ருர்கள். இது தென்சீமைப்பாளையக்காரர் களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் தோள்கள் பூரித்தன. முன்பே தாங்கள் எண்ணிய படி ஆடப் பழக்கி வைத்திருக்க மாபூஸ்கானுக்கு அவர்கள் பட்டங்கட்டி அரியனேயில் அமர்த்தி மரி யாதைகள் செய்தாக்கள். ஆயினும், என்ன? வர லாற்று அறிஞர் கூறுவது போல, அவனுக்கு உண்ண உணவில்லை ; பூலித்தேவர் கொடுத்தாற் முன் உண்டு.” அங்கிலேயில் (1760ல்) கும்பினிக்கும் நவாபுவுக்கும் நெருங்கிய நண்பராய் இருந்த பொல் லாப் பாண்டிய நாயக்கர் என்னும் கட்டபொம்மு இறந்தார். அவருக்குப்பின் பாஞ்சாலங்குறிச்சி யின் அரசுரிமை அவர் தலைமகனரான ஜகவீர பாண்டிய நாயக்கர் " கைக்கு மாறியது. இந்தக் கட்டபொம்மு தம் தங்தையாரைப் போன்றவரல்லர்; பூலித்தேவரைப் போன்றே வெள்ளைக் கும்பினியை வேரோடு கல்வி எறிய வேண்டும் என்ற கொள்கை படைத்தவர். இவர் பாஞ்சைப்பதியின் காவலரா னது பூலித்தேவருக்கு அளவிடற்கரிய மகிழ்ச்சி என்றே கூறலாம். இவருக்கு முன் இருந்த கட்ட பொம்மு நெருக்கடியான நேரங்களில் செய்த துரோகங்களே அவரால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?