பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வீரத் தலைவர் பூலித்தேவர்



22 வீரத் தலைவர் பூலித்தேவர் படையை வென்று முகம்மது அலிக்குப் பதிலாக மாபூஸ்கானே நவாபுவாக ஏற்படுத்துவதாக ஊக்க மூட்டிப் பிரெஞ்சுத் தளபதி டுப்ளே ஒரு கடிதம் எழுதினர். அதைத் திருவாங்கூருக்கு அனுப்பிக் கும்பினிப் படைக்கு ஆதரவு காட்டுவதைத் தவிர்க் தத் தம்பக்கம் சேர்ந்துகொள்ள வேண்டினர் பூலித் தேவர். அரசியல் மேதையோடும் அளவற்ற நாட் இப்பற்ருேடும் அங்கிய ஆட்சியை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே அகற்ற வேண்டும் என்ற தணி யாக ஆர்வத்தோடும் பூலித்தேவர் திருவரங்கூரா ருக்கு விடுத்த செய்தி செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. திருவாங்கூரார் இரட்டை வேடம் புனேந்தனர்; பூலித்தேவரிடமிருந்து வந்த கடிதத் கைக் கும்பினியாரிடம் காட்டி, அவர்களே மிரட்டப் பார்த்தனர். கும்பினிச் சார்பில் போர் முரசு கொட்டிக்கொண்டிருந்த கான் சாகிபு திருவாங் கூரை வழிப்படுத்தி மீண்டும் களக்காட்டைக் காணிக்கையாக்கினன். மண்ணேக்கண்ட கடல்மலை நாட்டார். கொடிப்போதில் கம் மதியை இழந்து பழைய நண்பர் பூவித்தேவரைக் கைவிட்டனர்; கான் சாகிபுவிடம் காதல் கொண்டனர். கான் சாகிபுவும் திருவாங்கூராரும் தென்பாண் டிப் பாளையக்காரர்களே அடக்க முதலில் பூலித் தேவரையே அழிக்க வேண்டும் என்று தீர்மானித்த னர். அதன் விளைவாக மூண்டது பெரும்போர். 1759, நவம்பர், 6-ஆம் தேதி மூண்ட அப் போரில் பூலித்தேவரும் பல்லாயிரக் கணக்கான அவர் வீரர்களும் காட்டிய விடுதலே ஆர்வமும்