பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வீரத் தலைவர் பூலித்தேவர்



முண்டில் வாழ்ந்த பெருந்தமிழர் ஆனந்த ரங்கம் பிள்ளை பல துாறு பக்கங்களில் பைந்தமிழில் வரைந்துள்ள அரிய நாட்குறிப்பு: பன்னிரண்டு தொகுதிகளாக ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பெற்று ள்ள இக்நாலில் பூவித்தேவர் கோட்டை பிடிபட்ட துயரச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார் ஆனந்த ரங்கம் பிள்ளை. மூன்றுவதாகக் குறிப்பிடத் தக்க நூல், நூற்றெண்பத்தெட்டு ஆண்டுகட்கு முன் பாரிசில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பெற்ற ஓர் அரிய வரலாற்று நூல். அதன் ஆசிரியர் பூலித்தேவர் காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்; அவ்வமயம் நடைபெற்ற போர்களில் தொடர்பு கொண்டவர். அவர் தம் நூலில் பூலித்தேவரின் முடிவு பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

  • பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து .ெ சன் னே மாநகர் காப்பாற்றப்பட்டதும் கான் சாகிபு மதுரைக் குத் திரும்பினன். அதன் பின் மாபூஸ்கான் பிடியை உதறி எறித்தவர்களுள் மிகுந்த வல்லமை படைத்த வரும் பெரிய பாளையக்காரருமாகிய பூலித்தேவரை அடக்குவதில் அவன் ஈடுபட்டான். அவரை அடக்க அவனுக்கு மூன்று ஆண்டுகள் ஆயின. ”

"பன்னிரண்டு ஆண்டுக் காலம் விட்டுவிட்டுப் பரங்கியரை எதிர்த்துப் போரிட்ட வீரத்தலைவர் பூவித்தேவரின் அரசியல் வாழ்க்கையும், அதனி னும் மேலாக அந்தச் சுதந்தர வீரரின் சொந்த வாழ்க்கையும் எவ்வாறு முடிந்தன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலவில்லை. ஆல்ை,