பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

51



800 கெஜ அகலமுழுடைய இக் கோட்டை ஒரு வாரம்வரை குண்டுகளால் இடைவிடாமல் துளைக்கப் பட்டது. இந்தக் குண்டு மாரியினின்றும் தங்களைக் காத்துக்கொள்ளக் கோட்டைக் குள் இருந்தவர் கள் போராடிய முறையினைக் கண்டு கர்னல் காம் பெலே பெரிதும் வியந்தான். சாவுக்கு அஞ்சாது, குண்டுகளின் நெருப்பு மழையையும் பொருட்படுத் தாது, அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் பனைமரத் துண்டுகளையும் வைக்கோலையும் கொண்டு கோட்டை யில் ஏற்பட்ட ஒவ்வொரு பிளவையும் வீரர்கள் இடைவிடாமல் அடைத்து அடைத்து ஒழுங்குபடுத் தியதைக் கண்டு, அவன் அடைந்த வியப்பிற்கு ஒர் அளவில்லை. ஒரு வாரப் போராட்டத்திற்குப் பின் ஒரு நாள் விடியற்காலே கோட்டைக்கு உள்ளிருக் தவர் கோட்டையை விட்டு வெளியேறினர். கடுமை யான மழை அப்பொழுது பெய்தது. அச்சமயத்தில் அவர்கள் அருகிலிருந்த காட்டிற்குள் மூன்று திசை களில் சென்று நுழைந்தார்கள். அப்போது அவர் கள் முற்றுகையிடுவோரால் சுடப்பட்டார்கள். ஆல்ை, அவர்கள் அடைந்த இழப்புச் சிறியது. வாசுதேவ நல்லூர்க்கோட்டை அளவிற் சிறியது, ஆனல், திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக்க பலம் வாய்ந்த கோட்டையென அது கர்னல் காம்பெ லால் கருதப்பட்டது. அதனுடைய பலம் பெரிதும் அது அமைந்திருந்த இடத்தையே பொறுத்திருக் தது. கோட்டைக்கு மேற்கிலும் தெற்கிலும் 1300 கெஜத்தோலைவில் அடர்ந்தகாடு இருந்தது. அதற்கு அப்பால் மேற்கு மலைத்தொடர் தலே நிமிர்ந்து கின்றது. இந்தக் காடுகளில் மறவர் பெருங்கூட்டம்