பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வீரத் தலைவர் பூலித்தேவர்



கிறைந்திருந்தது. முற்றுகையிடுவோர் கண்ணில் படாமல் அவர்கள் செயல்களைக் கவனித்துச் சரி யான நேரத்தில் அவர்கள்மேல் பாய்ந்து தாக்கு வதற்கு இக்காடு மறவர்களுக்குப் பெருந்துணே புரிக் தது. இக்கோட்டைக்கு இரண்டாவதாய் இருந்த பெரிய அரண் நஞ்சு கிறைந்த கருவேல முட்களாலா கிய பலம் வாய்ந்த முள்வேலி ஆகும். இக்கருவேல முட்களைக்கொண்டு திறமையாக முடைந்து வேலி யிட்டால் அது கூரிய கம்பிகளாலாகிய வேலியைக் காட்டிலும் கடப்பதற்கு அரிதாக அமையும். கோட் டையின் தெற்குக் கிழக்குச் சுவர்களுக்கு அருகி லேயே பேயாறு பாய்ந்தது. இது இன்ைெருவகைப் பாதுகாப்பாகக் கோட்டைக்கு அமைந்தது. கோட் டைச் சுவர்கள் அவற்றின் அளவு காரணமாகவும் பருமை காரணமாகவும் பெயர் பெற்றன அல்ல, சுவர்கள் சுடுமண்ணுலாகியவை. அவற்றின் அடித் தளத்தின் அ. க ல ம் 15 அடி. மேல் உச்சியின் அகலம் 5 அடி. கர்னல் காம்பெவின் முற்றுகையின் போது இந்தக்கோட்டையில் ஒர் இடம் ஐந்நூறு முறை குண்டுகளால் தாக்கப்பட்டது. ஆல்ை, கோட்டையில் ஒரு சிறு பிளவும் ஏற்படவில்லை. கோட்டையின் உறுதியை இது காட்டும். இந்தக் கோட்டை தரை மட்டமாக்கப்பட்டு ஒரு நூற்ருண் டிற்குமேல் ஆகிறது. கோட்டை இருந்த இடத்தில் புல்லும் பயிரும் முளைத்துவிட்டன. வெயி லி ல் காய்ந்தும் மழையில் மட்கியும் பல்லாண்டுகளாகப் பாழ்பட்ட கிலேயில் கிடந்தாலும் கோட்டையினடித் தளத்தில் அமைந்திருக்கும் சுடுமண் வரிசை இன் லும் தெள்ளத்தெளியத் தெரிகிறது.