பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 முன்னுரை

                  ____ ____ ____

'தன்னேர் இலாத தமிழ்' போல, வீரத்தலைவர் பூலித்தேவர் வரலாறும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இவ் வுண்மையை உலகிற்கு விளக்கமாய் எடுத்துக் காட்டும் அரிய வாய்ப்பு முதன்முதலாக எனக்குக் கலைமகள் (ஹேவிளம்பி___மாசி, பங்குனி) இதழ்கள் வாயிலாகக் கிடைத்தன. அக்கட்டுரையைப் படித்த அன்பர் பலர் என்னேப் பாராட்டி வாழ்த்தினர்; கேரிலும் கடிதம் வாயி லாகவும் தமது பேருவகையைப் புலப்படுத்தினர். அவர் களுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் பூலித்தேவர் பிறந்த ஊராகிய நெற்கட்டுஞ்செவ்வலின் கிராம அதிகாரி யாய் இப்போது விளங்கும் திரு. கிருஷ்ணன் அவர்களே. நன்றி உணர்ச்சி பொங்க அவர் 22-3-'58ல் வரைந்தனுப் பிய கடிதம் என் உள்ளத்தைப் பெரிதும் உருக்கிவிட்டது!

இவ்வாறு அன்பர் பலர் அளித்த ஊக்கத்தின் விளே வாக எழுந்ததே 'வீரத்தலைவர் பூலித்தேவர்' என்னும் இவ வாராய்ச்சி நூல். இந்நூலின் முற்பகுதியில் கலைமகள் இதழ்களில் வெளிவந்த கட்டுரை இன்னும் சற்று விரி வாக்கப் பெற்று வெளியிடப் பெற்றுள்ளது. அடுத் துள்ள இணைப்பு உ-ல் பூலித்தேவர் வரலாற்றிற்கு ஆதாரமாய் அமைந்துள்ள ஆங்கிலப் பகுதிகளேக் கான லாம். தொன்மைச் சிறப்பும் வரலாற்றுப் புகழும் வாய்ந்த அரிய பெரிய நூல்களினின்றும் அகழ்ந்தெடுக் கப்பெற்ற இப்பகுதிகள் கற்பார்க்குக் கழிபேருவகை ஊட்ட வல்லன. இவ்வாங்கிலப் பகுதிகளின் கருத்தைத் தமிழ் மொழி ஒன்றையே அறிவாரும் கற்று மகிழ அமைந்ததே இணேப்பு-க. இறுதியாய் அமைந்துள்ளது