பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 04 தப்பாமல் சண்டை முனையில் செத்தபேரை தானடக்கஞ் செய்ய வேணு மென்று கும்பினியார்களும் கம்பளத்தார்களும் கூவென்று வெள்ளைகள் வீசிக் கொண்டு நம்புதலாகவே பேசிக் கொண்டார் ஒரு நாழிகைக்கு மனராசி யென்ருர், 冕830 அவரவர் தன் படை தான் தெரிந்து அங்கே அறிந்தெடுத்தாரிருவர்களும் புவிகள் மெய்க்கப் புகழும் நிற்க அங்கே போர் மன்னர் தன்னையடக்கஞ் செய்தார். தந்திரக் காரளும் பாதரு வெள்ளையைச் சந்தனக் கட்டை மேல் வைத்தடக்கி செந்தழல் மூட்டிக் கொளுத்தினுராமங்கே. வெந்து நீராகியே போன பின்பு கம்பளத்தார்களும் கும்பாகவே கூடிக் கலந்தளப்புகள் செய்திருந்தார். 354● கும்பினிப் பட்டாளம் பிற்கட்டு மேசரும் கூடி ஆலோசனை யாயிருந்தார். வாலைப் பிராயத் துரை மகன் தானந்த மன்னனுெருத்திக் கொருமகன் தான் காலன் துரை பட்டசெய்திக்கல்லோ அங்கே காயிதம் போட்டானே பிறகட்டுமே. சென்னல் கெவுனர் சமூகத்திலே அதி சிக்கிரம் காயிதம் சென்றிடவே அந்நேரங் காயிதம் பார்த்துக் கெவுனரும் அதிக கோபங் கொண்டே யெழுந்து 3850 கையை வாயில் வைத்துத் தான் கடித்தான் தொப்பி கழத்தி நாற்காலி மேலடித்தான். வையக மெங்கும் நடுங்கிடவே துரை மார்ளும் கோபம் படபடென்ருர், இன்னமும் யோசனை யென்ன வென்பார் அந்த மன்னன் கட்டபொம்மு தன்னை யென்பார். பஞ்சப் பூமியிந்தப் பாஞ்சைப் பதி சொற்பப் பாளையப் பட்டடா பாவி யென்பார். கொஞ்சப் புத்திக்கார வஞ்சனென்பாரவன் கூட்டங்குலைய நாளாச்சு தென்பார். 2.860