பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 தெற்குச் சீமைக் கொரு கட்டபொம்மு அவன் சின்ன நவாபு போலாச்சு தென்பார். சற்கோட்டுத்" துரை நாமல்லவோ நல்ல சாதி வெள்ளைக்காரர் தானல்லவோ கருப்பு மனிதன் பார் கம்பளத்தானடா கட்டபொம்மு வலுதுஷ்டனடா. சொற்பப்பாளையக்காரனுக்கு நாமும் தோற்றுப் போனதாயும் பேராச்சு, மேசைப் பலகை மேலிருக்கலாமா அதின் மேலேயுந்தின் வைத்துத் திங்கலாமா 287 to காசி தேசமெல்லாம் ஆளலாமா நாமும் காலிலே பாப்பாசு போடலாமா திருச்சிராபுரஞ் சென்னல் புறமிந்தச் சீமைகள் கட்டி நாமாளலாமா ? வருமங்கள் செய்தானே கட்டபொம்மு இப்போ பெருமையால் வம்புதான் வளர்த்தான் கூக்குரல் சத்தங்கள் செய்தானே இப்போ கும்பினிப் பொல்லாங்கு செய்தானே தோக்குலவார் குல கட்டபொம்மு யிப்போ துன்மார்க்கஞ் செய்தானே ஊமைத் துரை 2880 சாதி வெள்ளைக்கார ராகலாமா நாமும் தலையிலே டொப்பியும் வைக்கலாமா மாதரிச்சோதவன் பாஞ்சை நகரத்தில் சாதுரிய மினி பார்ப்போ மென்முன். வந்தபொல்லாங்குக்கு அக்கினி மேஷர்தான் சிந்தை மகிழ்ந்தெழும்பு மென்ருர் சுந்தரமுள்ள துாை மார்கள் அங்கே சொன்ன மொழிப்படி தப்பாமல் ஆயிரங் கும்பினிக் கோர் துரையாம் வலு அக்கினி மேஷர் பயணம் வைத்தார். 2890. ஆயிரமேஷரும் ஆயிரம் சோஷரும் ஆயிரம் கும்பினிச் சேவகரும் கொண்ட அக்குரோணி தளமுங் கொண்டு பாஞ்சைக் கோட்டைக்குப் போகப் பயணம் வைத்தார். மண்டலமெங்கும் புகழ்ந்திடவே ஒயில் வண்டியிலேறி நடந்தார்கள்