பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஏற்படுத்திற்று. அவர்கள் சிறிதளவு அவனது கொடுமைகளை மறந்தார்கள். ஊமைத்துரை சிறையிலிருந்து வெளியேறியதும் அவன் வெள்ளேயரை எதிர்த்து முடிசூடிக்கொண்டதும் மக்களால் வரவேற்கப்பட்டது. இவ்விடைக்காலத்தில் .ெ வ ள் 3ள க் கார ர் ஆட்சியின் சுரண்டலை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். கோவில்பட்டிப் பகுதியில் வரி உயர்த்தது. அங்கு முக்கிய விளைபொருளான பருத்தி விலையைக் குறைத்துக் கட்டாயப்படுத்தி வெள்ளேயர்கள் வாங்கிச் சென்ருர்கள். கைத்தறி நெசவாளர்களின் தறிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளையர்கள் தங்களது துணிகளுக்கு நல்ல விலை கிடைக்கவே இவ்வாறு செய்தார்கள். வெள்ளையர்மீது வெறுப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஊமைத்துரை வெளிவந்து கோட்டையைப் புதுப்பித்தான். அவன் சிறையிலிருந்து தப்பி வந்ததிலிருந்து மறுபடியும் கோட்டை வெள்னேயர்களால் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்குள்ளாக அவன் தனது பாளையத்துக்குள்ளும் வெளியேயும் மக்களை வெள்ளையருக்கெதிராகத் திரட்டினன். இவர்களிருவரும் வெள்ளேயர் ஆதிக்கம் பெறுவதைத் தடுக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெவ்வேறு தன்மை வாய்ந்தவை. முதன் முதலில் 1793-ல் செட்டில்மெண்டு நடந்தது. தங்களுக்கு விரோதமான பாளையப்பட்டுகளின் சக்தியைக் குறைப்பதற்காக வெள்ளையர் அவர்களது பாளையங்களிலுள்ள கிராமங்கள் சிலவற்றைப் பிடுங்கி தங்களுக்குச் சாதகமான பாளையக்காரர் களுக்குக் கொடுத்துவிட்டனர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சியாருக்குச் சொந்தமான இரு கிராமங்கள் எட்டைய புரத்தோடு சேர்க்கப்பட்டன. இதனேக் கட்டபொம்மன் ஒத்துக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து வரி பாக்கிகளைக் கும்பினியார் கேட்டனர். தான் தனித்திருப்பதை உணர்ந்து கட்டபொம்மன் நாள் கடத்தின்ை. இடைக்காலத்தில் வெள்ளேயரை எதிர்க்க பாளையக்காரரைத் திரட்ட முயன்ருன், நாகலாதபுரம், .ெ கா ல் வார் ப ட் டி. , ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர், ஆ வு ை- யா புரம் முதலிய பாளையக்காரர்கள் மு. த லி ல் கட்டபொம்மனுக்குத்துணை நின்றனர். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்தனர். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவை சிறிய பாளையங்கள்; ஆத லால் எட்டையபுரம் போன்ற பாளையங்கள் தங்களை விழுங்கி விடும் என்று பயந்தனர். இரண்டாவது எட்டையபுரத்தார் வெள்ளேயரோடு சேர்ந்து கொண்டதால் தாங்கள் வெள்ளேயரை எதிர்க்கும் பாஞ்சாலங்குறிச்சியோடு சேர்ந்து கொள்வதே நலன்களைப் பாதுகாக்கும் வழியெனக் கண்டன. யாவரும் கடைசிவரை கட்டபொம்மைேடு சேர்ந்