பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

வீணரசு கொண்ட கம்பளத்தாரை நான்

  வெள்ளரிக்காய்போலே கொத்துகிறேன். 

மூணு நாளைக்குள் மடக்குகிறேன் அவன்

  காணியாச்சி கோட்டையைப் பிடிக்கிறேன்.

நொக்கு நொக்காக நொறுக்குகிறேன் சப்தம்

  நூறு நூறாயிரம் தீர்க்குகிறேன்.                         3510


அக்கினி போல் பத்தி எரிக்கிறேன் நாளை

  அமளைப் பொறி போலப் பொறிக்குகிறேன்

எங்கே யிருக்கிருன் கட்டபொம்மு அவன்

  என்ன தைர்யமாயிருக்கான்? 

கங்குலிருள் பொல்லா நேரமடா பாவி

  கட்டு மெட்டாப் பாரா நில்லு மென்றார்

நில்லடா நில்லடா பாவி என்று பாரா

  நேமித்து உசாராக நில்லு மென்றான்,

சொல்லிவாய் மூடி முடிக்கு முன்னே அங்கே

  சோறு கறியாக்கி உண்டனனாம்.                 3520


சம்ரதாயமுள்ள கும்பினிப்பாளையம்

  கெம்பீரமாக இருந்திடவே

செம்பாதி ராத்திரி வேளையிலே அங்கே

  சேரத் திரண்டல்லோ கம்பளந்தான்

கும்பாகக் கூடியே பேசுகிறார் நல்ல,

  தம்பி ஊமைத்துரை கெம்புகிறார்

அந்நேரந் தானாபதிப் பிள்ளையு மங்கே

  என்ன ஆலோசனை சொல்லினராம்

இன்னிமேல் பாஞ்சை நகரத்திலே தமக்கு

  இருப்பிடங் களுமில்லை என்றார்.                  3530


கட்டுங் காவலான பாஞ்சால நாட்டிலே

  காகம் பறக்காத கோட்டையிலே 

சிட்டுப் பறக்காத பாஞ்சால நாட்டிலே

  முட்டிக்குனிந்தாற் போலாச்சு தென்ருர், 

நம்மோ டெதிரிகளில்லை என்று பாஞ்சை

  நாட்டில் துரைத்தனஞ் செய்திருந்தோம். 

பொன் வாடை வீசிய பாஞ்சால நாட்டிலே

  பிணவாடை வீசுதென உரைத்தார். 

எமனைப் போலவே சோஷர் வெள்ளைக்காரன்

  எத்தனை கும்பினி வந்திருக்கான்                 3540