பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பூமி யதிருதே பாஞ்சால நாட்டுக்குப் பொல்லாங்கு மெத்தவே வந்த தென்முன். நேத்து முதல் நாளைச் சண்டையிலே வெடி நெறித்துப் பீரங்கி போட்டதினுல் காத்தும் புகைமண்டி யெழும்புகுதே கோடை காலத்திடி போல் முழங்குதே! மூர்த்தண்டமாகக் குமுறுகுதே கோட்டை மூலைக் கொத்தாளந் தகருகுதே ! சாதுரியமினி போதுமையா நாமும் தப்பிப் பிழைத்திட வேணுமையா. 3.5 50 சக்தி சடாச்சரி வீரமல்லு பொம்மு சக்கதேவி அம்மன் தன்னருளால் இத்தனை காலமும் பாஞ்சை நகரத்தில் சுத்த வீரத்தனம் செய்திருந்தோம். சம்ரதாயஞ் செய்யக் கூடாது இனி கும்பினியார் பகையாகாது. கும்பினியார் பகையாகாதையா நாமும் கோட்டை விட்டுப் போக வேணுமையா. வீணான பொல்லாங்கு வந்ததென்ருன் வெளி யேறியே போவது நல்ல தென்முன். 3560 தானுபதிப் பிள்ளை சொன்ன சொல்லை அப்போ தாஷ் டீகன் ஊமைத்துரைசாமி கையைக் கடித்து உதறினரே ரெண்டு கண்ணும் நெருப்புப் பொறிபரக்க. வையகத்தில் சுத்த வீரனென்ருல் இந்த வார்த்தையுரைப்பாயோ யெந்தன் முன்னே. கூட்டங்கூடி வந்த படைகுருவி மேல் வேட்டைக் கெழும்பிட வேணுமென்ருர், நாட்டிலே தீப்பட்டெறிந்தாலும் பாஞ்சைக் கோட்டை விட்டுப் போவதில்லை என்ருர். 3.570 சிட்டுப் பறக்காத பாஞ்சால நாட்டிலே சிவப்புச் சட்டைகளேது பாவி. கட்டுங் காவலான பாஞ்சை நாட்டிலே கருப்புச் சட்டைகளேது பாவி. காகம் பறக்காத கட்டபொம்மு வென்ருல் கருங்குருவியும் லாந்தாதே."