பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாட்டார்கள். தீவர்த்தி வெளிச்சத்தில் இரவோடு இரவாகக் கூட்டங்கள் நடத்தி மக்கள் படையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வீர உணர்வோடு சம்பளம் இன்றியே போர் புரிய முன் வந்தனர். கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களை வெள்ளையர் ஆட்சியி லிருந்து இவ்வீரர்கள் விடுவித்தனர். அதுமட்டுமல்ல, | மக்கள் ஆதரவிருந்ததால் பெரும்படை திரட்டி தூத்துக்குடியையும் ஊமைத்துரை கைப்பற்றிஞன். ஊமைத்துரை, துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிருன் தூத்துக்குடி துறை முகத்தின் வழியாகத் தான் சூரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும், வரும் வியாபாரப் பண்டங்கள் தென் பகுதிக்கு இறக்குமதி செய்யப் பட்டன. முக்கியமானவை துணி, க ண் ணு டி, இன்னும் சில அன்ருடத் தேவைப் .ெ பா ரு ள் க ள், கோவில்பட்டி, இராமநாதபுரம் பகுதிகளில் விளையும், பஞ்சு இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப் படுகின்றது. தூத்துக்குடி கடற்கரையில் காய்ச்சிய உப்பும், கடலிலெடுக்கும் முத்தும், இத்துறைமுகத்தி லிருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வரி வசூலில் கிடைத்த வருமானத்தைப் போலவே வியாபாரத் திலிருந்தும் பெரும் லாபம் கிடைத் திருக்க வேண்டும். துரித்துக் குடியில் மிகப் பெரிய பண்டச் சேமிப்புச் சாலையொன்றை ஆங்கி லேயர்கள் அமைத்திருந்தார்கள். அதற்கு காவல்படை ஒன்று இருந்தது. காவல் படையைத் தோற்கடித்து பண்டச் சேமிப்புச் சாலையையும், ஊமைத்துரை கைப்பற்றினுன் வெள்ளேயர் திகி லடைந்து சில நாட்களுக்கு கப்பல்களில் கடலுக்குள் சிறிது தூரம் செலுத்தி நங்கூரம் பாய்ச்சித் தங்கியிருந்தனர். அவர் களுடைய படைகளே அழித்தால் மட்டும் போதாது. வியாபாரத் திற்கும், முடிவு உண்டாக்க வேண்டும் என்பது ஊமைத்துரையின் எண்ணம். இவ்வாறு கட்டபொம்மன் போராட்ட காலத்தில் இருந்ததை விட அதிகமான மக்கள் ஆதரவுடன் ஊமைத்துரை புதிய முறையில் போராடினன். போராட்டத்தைக் கோட்டைக்கு வெளியில் பரவச்செய்தான் 1801-ஆம் ஆண்டு மே மாதத்திற் குள்ளாக மற்ற பாளையக்காரர்கள் அடங்கி விட்டதற்குப் பின்னும் அவன் மட்டும் வெள்ளேயர்களோடு போரிட்டான். அவனைத் தவிர அப்பொழுது வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் மருது சகோதரர்கள் மட்டுமே. ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்டதும் சிறிதுநாள் தலைமறைவாக இருந்துவிட்டுச் சிவகங் கைக்குச் சென்ருன். சில மாதங்களில் வெள்ளையர் படை சிவகங்கைக்குள் புகுந்தது' பல போர்களுக்குப் பின்னல் மருது சகோதரர்களும் ஊமைத்