பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ! துரையும் சிறைப்பட்டனர். அவைேடு அவனுடைய சகோதரன் சிவத்தையாவும் நண்பர்கள் தளவாய்ப்பிள்ளையும், குலசேகர பட்டணம் மூப்பனும் சிறைப்பட்டனர். மருது சகோதரர்கள் திருப்பத்துரரில் தூக்கிலிடப்பட்டார்கள். தளவாய்பிள்ளேயும் மூப்பனும் அவர்களோடு சேர்ந்த எழுபது பேர்களும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். மிகக் குறைந்த காலத்தில்-அதாவது-சுமார் ஒரு வருஷத்திற் குள்ளாக மக்கள் மனத்தைக் கவர்ந்து வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்ந்து அவர்களுடைய ஆதிக்கத்துக்குக் கடைசி முறையாக சவால் விட்டவன் ஊமைத்துரை. கோட்டை பிடிபட்ட பின்பும் பாஞ்சாலங்குறிச்சியி லிருந்து சிவகங்கைக்குத் தலைமறைவாகச் செல்வது அக்காலத்தில் எளிதல்ல. ஏனெனில் சுற்றிலும் கும்பி னிக்கு அடிமைகளான பாளையக்காரர்கள் இருந்தார்கள். ஊமைத் துரை தப்பி ஓடியதும் அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டு மென்று இவர்களுக்கெல்லாம் கட்டளை அனுப்பப்பட்டிருந்தது. கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்த எட்டையபுரம் பாளையக் காரர்களும், புதுக்கோட்டைத் தொண்டைமானும் கும்பினி யாரிடம் பெற்ற வெகுமதிகளைப் பாளையக்காரர்கள் அறிந்திருந் தார்கள். ஊமைத்துரையைப் பிடித்து கொடுக்கப் பல பாளையக் காரர்கள் தேடிக் கொண்டிருந்தனர். ஆனல் அவர்களிடம் பிடிப டாமல் ஊமைத்துரை சிவகெங்கை போய்ச் சேர்ந்தான். அதற்குக் காரணம் பாளையக்காரர்கள் தங்கள் சுய நலத்துடன் ஊமைத் துரையைப் பிடிக்கத் தருணம் பார்த்திருந்தார்கள். அவனுடைய வீரத்தையும் வெள்ளேயர் எதிர்ப்பு உணர்ச்சியையும் போற்றிய மக்கள் அவனைப் பாதுகாக்கத் தயங்கவில்லை. மக்களுக்கும், அவனுக்குமிருந்த தொடர்பையும், மக்கள் அவனிடம் காட்டிய பரிவையும் பற்றிப் பல நாடோடிக் கதைகள் வழங்குகின்றன. கோட்டை பிடிபடுமுன் மக்களைத் திரட்டுவதற் காக புரட்சித் தலைவர்கள் கிராமங்களுக்குச் சென்று வெள்ளேயர் எதிர்ப்புப் போரில் சேருமாறு மக்களை அறைகூவ இரவில் கூட்டங்கள் நடத்துவார்கள். அக்கூட்டங்களுக்கு ஊ ைம த் துரையும் செல்வதுண்டு. பலர் பேசுவார்கள். ஆனல் ஊமைத் துரை வெள்ளைக்காரர் என்பதற்கடையாளமாக அவர்களனரியும் தொப்பியைக் காட்டித் தலையைத் தொட்டுக் கையால் சைகை செய்து வாயால் ஊதிக் காட்டுவான். இதுதான் வாய் பேச முடியாத ஊமைத்துரை மக்களுக்கு விடுக்கும் அறைகூவல். பேச்சுக்களைவிட அவன் முகத்தில் காணப்பட்ட உறுதியும் மக்கள் மீது கொண்ட அன்பும் அவன் கைச்செய்கைகளுக்கு வலிமை