பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 4

தேட்டிலதிக நிதி வளரும் பாஞ்சை நாட்டினில் கம்பளச் செல்வருந்தான் 446 0 வேட்டைப்படை போலே கூடினராம் சுத்த வீரர்கள் வீரியம் கூறினராம் கத்தி எடுத்தார் கைவாள் எடுத்தார், வெகு விஸ்தாரமாகவே வந்து நின்ருர், எத்தனை கம்பளந்தானுக்க இனக் கெத்தனை எத்தனை பேராச்சு? கைக்காரர் தங்க தண்டியல்காரர் சரி கணக்கு நூறு பேர் கம்பளத்தார் மைக்காரர் வில்க் காரர் தானும் வந்தார். ஒரு வரிசை நூறு பேர் கம்பளத்தார் 447{} 'பாளையங்கோட்டைப் புலனறிந்து வீர பாண்டியன் ஊமைத்துரையை நாமும் ஆளும் அடையாளந் தோற்ருமல் புலனறிந்து சண்டைகள் செய்துவென்று வேட்டைகளாடித் திரும்புதற்கு தம்மள் நாட்டுத் தலைவரைக் காண்டதற்கு கோட்டைக்குப் போறது எப்படியோ' வென்று கூடியாலோசனை செய்தார்கள். சுப்ரமணியர் பிரார்த்தனே தானென்று எப்படி வேசம் எடுக்கலுற்றன். 4.480 சற்பிள்ளையாகவே கம்பளத்தாருமே முற்பழி வாங்கிட வேணு மென்று பழனியாண்டவர் போல் வடிவாய் நல்ல பத்தர் சித்தர்கள் போலவேதான் வளமாய்க் காவடி தானெடுத்தார் காவி வஸ்திரந் தானும் தரிக்கலுற்ருர் உத்ராட்சத் தாவடம் தானணித்தார் இ.ை - ஒட்டியாணங்களைப் பூட்டுகிருர் நத்து மணிகள் தானெடுத்தார் சங்கு நாதத் தொனிகள் முழங்கலுற்ருர். 4490 செம்புக்கடுக்கன் தள தளென்னக் காதில் ஐம்பொன் முறுகுப் பளபளென்ன சம்ரதாயமாகத் தானெடுத்தார்கள் கல்வித் தன்னன்னப் பாட்டுப் படிக்கலுற்ருர்