பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வெள்ளையரது உரிமையை நிராகரிக்க, அவர்கள் வரியாக வசூலித்து சேமித்து வைத்திருந்த நெல்லைச் சூறையாடினர்கள். இதன் மூலம் வரி கொடாமலிருக்க, மக்களுக்குச் சிறிதளவு ஊக்கம் பிறக்கவே இவ்வாறு செய்தார்கள். கட்டபொம்மு கருங்குளத்தில் நெல்லைக் கொள்ளையடித்தது, பூலுத்தேவர் ஆழ்வார் குறிச்சியிலும், அதற் கருகிலுள்ள நவாபு களஞ்சியங்களை கொள்ளையடித்ததும், ஊமைத்துரை தூத்துக்குடியைக் கைப்பற்றி வெள்ளேயர் பண்டகச் சாலையைக் கொள்ளையிட்டதும், சிவகெங்கைச் சீமையில், வெள்ளை யர் உதவியோடு நாவழ வரியாக வசூலித்துச் சேர்த்து வைத்ததை வேலுநாச்சியார் பெயரால் மருது சகோதரர்கள் கொள்ளையடித் ததும், வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக பாளையக்காரர் எடுத்துக் கொண்ட போர் முறை நடவடிக்கைகளே! இவை கொள்ளை யென்ருல் இக்கொள்ளைகளைச் செய்த கொள்ளைக் காரர்' களின் வீரத்திற்கும் துணிவுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆகவே பாளையக்காரர்களின் வர்க்கத் தன்மையை அறிந்து கொள்ளாமல் அவர்களுக்குள் ஒருவனது நடவடிக்கைகளை மட்டும் சுட்டிக்காட்டிக் கொள்ளைக்காரன் என்பதும், மற்றவர்கள் நடவடிக் கைகளை மறைத்து தலைசிறந்த வீரன் என்பதும் ஒருபுறம் சாய்ந்து முடிவுக்கு வருவதாகும். பல குறைபாடுகளுடைய பாளையக்காரர்களில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தவர்களுக்கும், அவ்வெதிர்ப்பில் உயிர்விட்ட வீரர்களுக்கும் வரலாற்றில் போற்றத்தக்க இடம் உண்டு. அவ் விடத்தில் அவர்களைச் சரியாக மதிப்பிட்டு அமர்த்துவதே வரலாற்று ஆராய்ச்சியாளர் «5LGü) Lf). நாட்டுக் கதைப் பாடல்கள் கதையடங்கிய நாட்டுப் பாடல்கள் தமிழ்நாட்டில் ஏராள மாக இருக்கின்றன. இவையாவும் கிராமத்திலுள்ள உழைக்கும் மக்களிடையே இன்னும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இவை களில் சிலவகைப் பாடல்கள் பாடகர்களால் விழாக்காலங்களில் பாடப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலும், குமரி மாவட்டத்திலும் கோவில் கொடைகளின் போது பல வில்லுப் பாட்டுகள் பாடப்படுகின்றன. அறுவடைக் காலங்களில், திருநெல் வேலி மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் கட்ட பொம்மன் கதைப் பாடல்களைக் கூத்தாக நடிக்கிருர்கள். தென்னற் காடு செங்கற்பட்டு மாவட்டங்களில் தேசிங்கு ராஜன்கதை பாட் டாகப் பாடப் படுகிறது. கோயம்புத்துார் மாவட்டத்தில் கள்ளழகர் அம்மானே பாடப்படுகிறது. நாட்டுப் பாடலாக வீ. 2