பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 முதலில் தோன்றிய நல்ல தங்காள் கதை, பாட்டாகப் பாடப் பட்டதுமன்றி நாடகமாகவும் நடிக்கப்பட்டது. இப்பாடல்கள் அம்மானை, சிந்து, கும்மி, லாவணி, வில்லுப் பாட்டு, ஏசல் முதலிய பல உருவங்களில் இன்னும் நிலை பெற்றிருக் கின்றன. ஆனல் கிராம வாழ்க்கையோடு தொடர்பற்றுப்போன படிப்பாளிகளுக்கு இவற்றைப் பற்றி எதுவுமே தெரியாது. இப் பாடல்களை இழிவானவை எனவும் எண்ணுகிருர்கள். தமிழ்நாட் டில் பெரும் பகுதியான மக்கள் கிராமங்களில் வாழ்கிருர்கள். கிராம மக்களில் பெரும்பாலோர் உழைப்பாளிகள். உழவு, நெசவு, விறகுவெட்டுதல், ஆடுமாடுகள், மண்பாண்டம் செய்தல், பாய் முடைதல் முதலிய தொழில்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கிருர்கள். கிராம வாழ்க்கைக்கு ஆதாரமான உழைக்கும் மக்கள் இப்பாடல் களைப் பாடுகிறர்கள்; அல்லது கேட்கிருர்கள். அவர்களது பண் பாட்டில் இப்பாடல்கள் ஒரு அம்சமாக விளங்குகிறது. எனவே உழைக்கும் மக்களின் பண்பாட்டை அறிந்துகொள்ள விரும்பு வோர், இப்பாடல்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். இப்பாடல்களைப் புராணக் கதைப்பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், சமூகக் கதைப் பாடல்கள், என்று மூவகையாகப் பிரிக்கலாம். அல்லியரசாணிகதை, பவளக் கொடிக் ை தித புவனேந்திரன் களவு மாலை, பார்வதி கல்யாணம், தட்சராஜன் சரித்திரம் முதலிய கதைகள் புராணக் கதைகளைத் தழுவியது. ஆனல் இக்கதைகள் முற்றிலும் புராணக் கதைப்போக்கைத் தழுவியவை அல்ல. இரண்டொரு சம்பவங்களைப் புராணக் கதையிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொண்டு தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் கண்ணுேட்டத்தில் கற்பனையை ஒடவிட்டுப் பின்னப் பட்டிருக்கும் கதைகளே இவை. மகாபாரதத்தில் அர்ச்சுனன் சித்ராங்கதை என்னும் பாண்டிய குமாரியை மணந்துகொண்டான் என்று வரும் சம்பவத்தை, கற்பனை வளத்தால் அல்லி அரசாணி மாலையாக எவரோ ஒரு கவி புனைந்துவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்க் கலாச்சாரத்திற்கும் வடநாட்டுக் கலாச்சாரத் திற்கும் இணைப்பு ஏற்படுத்தும் முறையில் பல கதைகள் தோன்றின. இவ்வாறு தோன்றிய கதைகளுள் ஒன்று ஏணியேற்றம் என்பது. இக்கதைக்கு ஆதாரம் எதுவும் மகாபாரதத்தில் இல்லை. ஆனல் இக்கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள். பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கும் போது சுபத்திரை தனியாக இருந்தாள். அவளைத் துரியோதனன், தன்னிச்சைக்கு இசையும்படிக் கேட்டான். அவள் அர்ச்சுனனது மற்ருெரு மனைவியான அல்லி இருக்கும் மதுரை வந்து சேருகிருள். துரியோதனன் அவளைத் தேடிக்கொண்டு வருகிருன். அவனே