பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 அவமானப்படுத்துவதற்காக அல்லி ஒரு தந்திரம் செய்கிருள். ஒரு இயந்திர ஏணி செய்யச் சொல்லி அதன்மீது படுத்துக் கொண்டால் சுபத்திரையிடம் அனுப்பிவிடுவதாகச் சொல்லுகிருள். அந்த ஏணியில் அவன் படுத்ததும் அது பல விடங்களுக்கு அவனைக் கொண்டு செல்கிறது. போகிற இடங்களிலெல்லாம் பெண்கள் அவனை அடிக்கிருர்கள். கடைசியில் அவன் மனைவியிடமே அது அவனைக் கொண்டு தள்ளிவிடுகிறது. இப்படி ஒரு கற்பனைக் கதையை புராண கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கி இருக்கிருர்கள். புராணக் கதைகளை கேலி செய்யும் முறையிலும் சில நாடோடிப் பாடல்கள் இருக்கின்றன. பார்வதி கலியாணம் இவ்வகையைச் சார்ந்தது. தட்சராஜன் கதையும் அநேகமாக அப்படித்தான். இக்கதைகளில் புராணக் கண்னேட்டத்திற்கு நேர் எதிரான கருத்துக்களைக் காணலாம். ஆகையால் புராணக் கதைகள் என்று சொல்லும் பொழுது, நாடோடிப் பாடல்களின் கதை மாறுதலில்லாமல் புராணத்திலுள்ளதுபோல் இருக்கும் என்று கருத வேண்டியது இல்லை புராணக் கதைகளை உழைப் பாளி மக்கள் எவ்வகையில் புரிந்து கொள்கிருர்களோ அம் முறையில் இக்கதைகள் மாற்றப்பட்டிருக்கும். இரண்டாவது வகையான கதைகள் சரித்திரக் கதைகள். இ வ ற் றி ல் முக்கியமானவை தேசிங்கு ராஜன் கதை, கட்டபொம்மன் கதை, மருதுபாண்டியர் கதை, கான்சா கி சண்டை, பூலுத்தேவர் சிந்து முதலியவை, இவ்வரலாற்று வீரர் களின் சரித்திரங்கள் பலவகையான உருவங்களில் நாட்டுக் கதைப் பாடல்களாக வழங்கி வருகின்றன. இக்கதைகளில், சரித்திரத்தை நாம் உழைக்கும் கிராம மக்களின் கண்ணுேடத்தில் காண்கிருேம். இச்சரித்திர வீரர்களின் சிறந்த பண்புகளை இக்கதைகள் போற்றிப் புகழ்கின்றன. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலுத்தேவர் முதலிய வெள்ளையரை எதிர்த்த வீரர்களின் வரலாறு வழிவழியாக இக்கதைப் பாடல்கள் மூலம் நமக்குக் கிடைத்து இருக்கின்றன. உண்மை வரலாற்றை மறைத்துவிட ஆங்கிலச் சரித்திர ஆசிரியர் கள் செய்த முயற்சிகளே இப்பாடல்கள் முறியடித்து விட்டன. வெள்ளையர்கள் மறைத்து விட்ட பல நிகழ்ச்கிகளையும் இப் பாடல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இப்பாடல்களைக் கொண்டு மட்டும் சரித்திர நிகழ்ச்சிகளை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. இவற்றை ஒதுக்கித் தள்ளி விட்டும், உண்மையான நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளவும் முடியாது. கிடைக்கும் சரித்திரச் சான்றுகளையும், நாட்டுப் பாடல்களையும் உற்று நோக்கி உண்மைகளைச் சலித்துப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும்.