பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தேசம் புகழ் கட்டபொம்மு துரை மீதில் செந்தமிழ்க்கும்மி தமிழ்பாட வாசம் பொருந்தும் நளின மலர்பதம் வாலை மனேன் மணி காப்பாமே பூலோக மெய்க்கும் பாஞ்சாலைப் பதிவளர் புண்ணியவான் கட்டபொம் மேந்திரன் மேல் கோலாகலக்கும்மிப் பாட்டுரைக்கப் பாஞ்சை குஞ்சரன் பொற் பாதங் காப்பாமே பாஞ்சைப் பதியில் வளர்ந்தோங்கும் வீரபாண்டியக் 30 கட்டபொம் மேந்திரன் மேல் வாஞ்சையாய் கும்மித் தமிழ்ப் பாடதிரு வாக்கருள் செய்வாளே சக்கதேவி பூலோக பாண்டியன் கட்டபொம்மு துரை மேலுங்கும்மித் தமிழ்ப் பாட்டுரைக்க சாலோக சாமீப சாரூப சாயுச்ய சக்கதேவி பதங் காப்பாமே சத்தி சடாட்சரி வீரமல்லு பொம்மு சக்க தேவி பதங் காப்பாமே பாஞ்சைவளம் சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன் 40 நாட்டுவளங்களைச் சொல்லுகிறேன் பாஞ்சைக் கோட்டை வளங்களைக் கேளுமையா கோட்டைகளாஞ் சுத்துக் கோட்டைகளாம் மதில்க் கோட்டைகள் தான் கெட்டி வேலைகளாம் வீட்டிலுயர் மணிமேடைகளாம் மெத்தை வீடுகளா மதிலோடை களாம் பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் பணப் பொக்கிஷ வீடும் பார் சாஸ்திகளாம்" சக்கதேவி கோவிலாலய மாந்தேவி சன்னதி வாசல் விலாசங்களாம்" . 50 மிக்க நெடுந் தெரு வீதிகளாம் வெகு விஸ்தாரமாய்க் கொலு மண்டபமாம் சப்ரகூட மஞ்சமேடை களாம் சித்ரச் சாலையுஞ் சந்தனச் சோலைகளாம்