பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

へ} 。 عاہ، سہمتی புஷ்ப மலராலே பந்தல்களாம் வெகு செப்ப முடனே ஆசாரங்களாம் ஆசார வாசலலங்காரம் துரை ராசன் கட்ட பொம்மு சிங்காரம். ராசாதி ராசன் அரண்மனையில் பாஞ்சை நாட்டரசன் கொலுவீற்றிருந்தான். 6 0 பூவாசம் வீசும் புகழ்வீசும் பெங்கும் பொன் வாடை வீசும் பன்னீர் வீசும், வாவிக்கரைகளும் சோலைகளும் நந்த வனமான விலாசங்களும் வாழை பலாவும் பழஞ் சோரியும் நல்ல மாவுங்கமுகும் வளர்ந் தோங்கும் தாழைமலர்களும் பூச்சொரியும் நதி தாமரை பூத்திடும் மேன்மைகளும் விந்தையாகத் தெருவீதிகளும் வெகு விஸ்தாரமாய்க் கடை வாசல்களும் 70 நந்தவனங்களும் சந்தனச் சோலையும் நதியுஞ் சென்னெல் கமுகுகளும், வாரணச் சாலை யொருபுறமாம் பரி வளரும் சாலை யொருபுறமாம் தோரண மேடை யொருபுறமாம் தெருச் சொக்கட்டான் சாரியலோர் புறமாம் சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் வளஞ் சொல்லி மயில் விளையாடிடுமாம் வாலை எனுஞ் சக்க தேவி கிருபையால் பாலும் பவிசும் வளர்ந்திடுமாம். 80 அன்பு வளர்ந்தேறும் பாஞ்சால நாட்டினில் அதிசயஞ் சொல்கிறேன் கேளுமையா தென் பாஞ்சைப் பதி நாட்டு முயலது திரும்பி நாயை விரட்டிடுமாம்" முயலும் நாயை விரட்டிடுமாம் நல்ல முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே பசுவும் புலியும் ஒரு துறையில் வந்து பால்குடிக்குந் தண்ணிர் தான் குடிக்கும் § {} கறந்த பாலையுங் காகங் குடியாது கட்டபொம்மு துரை பேருசொன்னல் வரந்தருவாளே சக்க தேவி திருவாக்கருள் செய்வாளே சக்க தேவி