பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கத்திப்புருவங்கள் போலிருக்கும் கடைக் கண்ணுக்கு மையிட்டு பன்னிரிட்டு 盛40 சாந்துபுனுகு சவ்வாதணிந்தார் நல்ல சந்தணப்பொட்டு விலாசம் வைத்தார் காந்தியாய் துப்பட்டா மேல்போட்டார் கையில் கல்கட்டுமோதிரம் தானுமிட்டார் கண்டி சரப்பளி மோகன மாலைகள் யெண்டிசை யெங்கும் துலங்கிடவே சுண்டுவில்லுங் கையில் தானெடுத்தார் சில சுத்த வீரர் கத்தி தானெடுத்தார் இந்த விதமாகச் சந்திரர் போலவே இப்படிச் சிங்காரஞ் செய்திடவே 450 சிந்தை மகிழ்ந்தனர் கட்டபொம்மு துரை சிவத்தையா ஊமைத்துரையுடனே போசன் தானதிபதி சுப்ரமணிய பிள்ளை புண்ணியவான் சிங்கேறு தன்னுடனே வாசமுள்ள பூசை செய்திடவே மகா ராசமன்னர்கள் புகழ்ந்திடவே கெங்கை நதியிலே நீராடி வெகு கெச்சிதமாகவே சீராடி மங்களமா யேழு லிங்கம் வைத்து அருள் தங்கும் சிவபூஜை தான்முடித்து 盛60 பொங்குமுடன் சங்குதான் முழங்கச் சிவபூஜை குருபூஜை மால்விளங்க எங்கும் பிரபலமாகவேதான் பிர பலமாய்த் தான தருமங்கள் செய்தார் பூரண சாஸ்திரம்தான் பார்த்தார் தீரன் போஜன சாலையில்தான் புகுந்தார் சீரான போஜன சாலையிலே துரை தேபூசை செய்திட வேணுமென்று வந்திருந்தார் சுயபந்து சனத்துடன் வாழையிலை போட்டு நேர்மையுடன் 470 சந்தொட்டியாய்ச்சில தாதியர்கள் கறி தானும் வைத்துச் சம்பாச் சாதம் வைத்து சம்பாச் சாதமும் ரொம்ப' வைத்தாரதில் சாதிக் கோழிக்கறி மேலே வைத்தார்